உக்ரேன் கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தை டிசம்பர் 25ஆம் தேதிக்கு மாற்றியிருக்கிறது.
அதற்கான மசோதாவில் உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கையெழுத்திட்டிருக்கிறார். உக்ரேனும் ரஷ்யாவும் பாரம்பரியமாக ஜனவரி 7ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடின.
ரஷ்யாவின் பாரம்பரியத்தைக் கைவிடவும் உக்ரேனுக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிக்கொள்ளவும் புதிய சட்டம் முன்மொழியப்பட்டதாகக் கூறப்பட்டது.
குறைந்தது 17ஆம் நூற்றாண்டிலிருந்து உக்ரேன் மாஸ்கோ தேவாலயத்தின் தலைமைத்துவத்தைப் பின்பற்றியது என The Guardian செய்தி நிறுவனம் தெரிவித்தது.
ஆனால் 2019ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரேனின் ஓர் அங்கமாக இருந்த கிரைமியாவை ஆக்கிரமித்தபின் உக்ரேனின் பழைமைவாத தேவாலயம் அந்த உறவை முறித்துக்கொண்டது.
சென்ற ஆண்டே மக்கள் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்ட உக்ரேனின் பழைமைவாத தேவாலயம் அனுமதித்ததாக The Guardian சொன்னது.
-sm