கம்போடியாவின் அடுத்த தலைவராக ஹுன் மானெட் இன்று நியமனம்

கம்போடிய மன்னர், நாட்டின் அடுத்தத் தலைவராகத் திரு. ஹுன் மானெட்டை இன்று நியமனம்.

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக நாட்டின் தலைவராக இருந்த திரு. ஹுன் சென், பிரதமர் பொறுப்பைத் தமது மகனிடம் ஒப்படைக்கிறார்.

கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் திரு. ஹுன் சென்னின் கட்சி அபார வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து, பிரதமர் பொறுப்பில் இருந்து அவர் விலகினார்.

தேர்தலில் போட்டியிட, நாட்டின் முன்னணி எதிர்க்கட்சி அனுமதிக்கப்படவில்லை.

ஆகையால் போட்டி ஒருதலைப்பட்சமானது எனக் குறைகூறப்படுகிறது. வரும் 22 தேதி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹுன் மனாட், புதிய அரசாங்கத்தை அமைக்க அது வழிவிடும்.

 

-sm