மியன்மாரில் பச்சை மாணிக்கக் கல் சுரங்கத்தில் நிலச்சரிவு – 30க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை

மியன்மாரில் ஜேட் எனப்படும் பச்சை மாணிக்கக் கல் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் 30க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை.

அங்கு தேடல் மீட்புப் பணிகள் தொடர்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கச்சின் மாநிலத்தில் உள்ள மலையோரப் பகுதியில் அந்தச் சம்பவம் நடந்தது.

உலகத்திலேயே ஆகப் பெரிய, அதிக விலைமதிப்பு மிக்க பச்சை மாணிக்கக் கற்கள் கொண்ட சுரங்கங்கள் அங்கு உள்ளன. 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சுரங்கப் பணியில் ஈடுபட்டிருந்தபோது 13 ஆகஸ்ட் நிலச்சரிவு ஏற்பட்டது.

அவர்கள் அருகில் இருந்த ஏரிக்குள் விழுந்ததாகக் கூறப்படுகிறது.
34 பேரைக் காணவில்லை என்றும் 8 பேர் காயமுற்றதால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் உள்ளூர் தேடல் மீட்புப் படைத் தலைவர் தெரிவித்தார்.

 

 

-fmt