ஹீரோவாக இருந்து ஜீரோவான ராஜா பெட்ரா

“ஆர்பிகே-க்கு வீட்டு நினைப்பு வந்துவிட்டது. நாடு திரும்பிவர விரும்புகிறார்.அதனால், கொள்கைகளை விற்றுவிட்டார்.”

ஆர்பிகே: அன்வார் பிரதமர் ஆகும் தகுதியற்றவர்

குழப்பமற்றவன்: ஆர்பிகே (ராஜா பெட்ரா கமருடின்) மீது மதிப்பு வைத்திருந்தேன். ஆனால், இப்போது அடியோடு இல்லை என்றாகிவிட்டது.

அன்வார் இப்ராகிம் பற்றி இதுவரை கேள்விப்பட்ட விசயங்களிலிருந்து அவர் ஒரு பரிபூரண தலைவர் அல்லர்தான். யார்தான் பரிபூரணமானவர்? நாட்டை இப்போது ஆட்சிசெய்யும் மூளையற்ற மூடர்களைவிட அவர் எவ்வளவோ மேல்.

அனாக் ஜேபி:ஆர்பிகே, செய்திகளையும் நண்பர்களையும் பணத்துக்காக விற்று வருகிறார். அம்னோவின் ஊடகங்களைப் பயன்படுத்தி மாற்றரசுக் கட்சியையும் அன்வாரையும் கவிழ்க்க முயல்கிறார்.

முன்பு சரவாக் தேர்தல் நேரம் பார்த்து தாக்குதலை நடத்தினார்.இப்போது 13வது பொதுத் தேர்தல் வரும் நேரத்தில் மீண்டும் தாக்குதலைத் தொடக்கியுள்ளார். சம்பவம் நடந்தபோது படுக்கை அறையில் உடன் இருந்தவர் போல் அல்லவா பேசுகிறார்.

சரவாக் தேர்தலுக்குப் பின்னர் ஆர்பிகே-இன் பரப்பரபான செய்திகளைப் படிப்பதை நிறுத்தி விட்டேன்.

அன்வார், பிரதமர் ஆவாரா இல்லையா என்பது முக்கியமல்ல. ஒரு நாட்டின் நிர்வாகத்தில் சரிபார்க்கவும் சரிபண்ணவும் இரட்டை-கட்சிமுறை இருப்பதுதான் முக்கியம்.

அதை இப்போது உருவாக்கியிருக்கிறோம். அது தனிப்பட்ட ஓர் ஆளுமையோ அரசியவாதியோ அல்ல; மலேசிய பொதுமக்கள்தான் சரிபார்ப்பவர்கள்; சரிபண்ணுபவர்கள்.

யோசிப்பவன்: ஆர்பிகே, என்னைக் கேட்டால் பக்காத்தானை வழிநடத்த அன்வார்தான் சிறந்தவர் என்பேன்.

உங்கள் சொல்லும் செயலும் பக்காத்தானின் வளர்ச்சிக்கு உதவாது; அதைக் கெடுக்கத்தான் உதவும். ஒரு காலத்தில் அம்னோவைப் பற்றி என்னவெல்லாம் பேசினீர், அதுவெல்லாம் என்னவாயிற்று?

ம்ம்ம்ம்: ஆர்பிகே, இப்போது நீங்கள் ஒரு கொள்கைவாதி இல்லை. முன்பு உங்கள்மீது பெருமதிப்பு வைத்திருந்தேன்.இப்போது எள்ளளவு மதிப்போ மரியாதையோ இல்லை. பிஎன்னிடமிருந்து எவ்வளவு வாங்கினீர்?

போத்தாக் சின்: ஆர்பிகேமீது அளவற்ற மதிப்பை வைத்திருந்தேன்.எல்லாம் போய்விட்டது. முன்னாள் பிகேஆர் தலைவர்கள் எஸாம் முகம்மட் நோர், சந்திரா முசாபார் சென்ற வழியில் நீரும் போய்விட்டீர். இனி, உங்கள் இணையத் தளத்தை வாசிக்க மாட்டேன்.

நீங்கள் என்ன சொன்னாலும் என் வாக்கு பக்காத்தானுக்குத்தான். 

கேஜென்: ஆர்பிகே-க்கு வீட்டு நினைப்பு வந்துவிட்டது.சிறைக்குப் போகாமல் நாடு திரும்பிவர விரும்புகிறார்.அதனால், கொள்கைகளை விற்றுவிட்டார்.அவருடைய வலைத்தளத்தை இழுத்து மூடிவிடலாம்.இனி, யாரும் அதை வாசிக்கப் போவதில்லை.

ஜெடி: மாற்றம் வேண்டும் சிறந்த மலேசியா உருவாக வேண்டும் என்று எழுதியும் பேசியும் வந்தவர் ராஜா பெட்ரா. அம்னோவைக் கடுமையாக எதிர்த்தவர்.

இப்போது அம்னோ சொல்படி நடப்பவராக மாறியுள்ளார். ஆளும் கட்சியுடன் ஏதோ ஓர் உடன்பாடு செய்துகொண்டுள்ளார் போலத் தெரிகிறது.

TAGS: