மியான்மர் அகதிகள் முகாம் மீது பீரங்கி தாக்குதல்; குழந்தைகள், பெண்கள் உள்பட 29 பேர் உயிரிழந்தனர்

2021-ம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து மியான்மர் ராணுவ ஆட்சியில் உள்ளது. அன்றிலிருந்து அங்குள்ள சிறு சிறு குழுக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர்.

அவர்கள் அனைவரும் இரக்கமின்றி இராணுவத்தால் கொல்லப்பட்டனர். எப்போதும் கலவர நாடாக காணப்படும் மியான்மரின் ராணுவ ஆட்சிக்கு சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. எனினும், மக்களுக்கு எதிராக இராணுவம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் மியான்மரில் சீன எல்லை அருகே உள்ள அகதிகள் முகாம் மீது பீரங்கி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 29 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிழல் தேசிய ஒற்றுமை அரசாங்கம் (NUG) மற்றும் யாங்கூனில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம் ஆகியவை இந்தத் தாக்குதலுக்கு இராணுவத்தைக் குற்றம் சாட்டின.

மியான்மர் இராணுவ ஆட்சிக்குழுவின் செய்தித் தொடர்பாளர் ஜாவ் மின் துன், இந்தக் குற்றச்சாட்டை மறுத்ததோடு, “நாங்கள் விசாரித்து வருகிறோம். நாங்கள் எப்போதும் எல்லையில் அமைதியை கவனித்துக்கொள்கிறோம்.

 

-ip