குதப்புணர்ச்சி வழக்கு ll தீர்ப்பு வழங்கப்படும் போது பக்காத்தான் வலிமையைக் காட்டும்

எதிர்த்தரப்புக் கூட்டணியான பக்காத்தான் ராக்யாட், தனது தலைவர் அன்வார் இப்ராஹிம் மீதான குதப்புணர்ச்சி வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் இந்த மாதம் 9ம் தேதி கோலாலம்பூரில் ஆயிரக்கணக்கான  ஆதரவாளர்களை ஒன்று திரட்ட திட்டமிட்டுள்ளது.

“அன்வார் தலைமைத்துவத்திற்கு ஆதரவு அளிக்க 100,000 ஆதரவாளர்களை பக்காத்தான் ராக்யாட் களத்தில் இறக்கும்,” என பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி இன்று கூறினார்.

அவர் பெட்டாலிங் ஜெயாவில் பிகேஆர் தலைமையகத்தில் நிருபர்களிடம் பேசினார்.

பாஸ் கட்சி அதற்கு முழு ஈடுபாடு வழங்க உறுதி அளித்துள்ளது. அதே வேளையில் பிகேஆர் இளைஞர் தலைவருமான பேரணி ஒருங்கிணைப்பாளர் இஸ்காண்டார் முகமட் அக்கின் -னுடன் அணுக்கமாக தொடர்பு கொண்டுள்ளது என்றும் அஸ்மின் தெரிவித்தார்.