வெளிநாட்டில் உள்ள எல்லா மலேசியருக்கும் அஞ்சல்வழி வாக்களிக்கும் உரிமை

வெளிநாடுகளில் வசிக்கும் மலேசிய வாக்காளர் அனைவருமே அஞ்சல்வழி வாக்களிக்கும் உரிமையை விரைவில்  பெறுவர்.

“அடுத்த பொதுத்தேர்தலில் இது நிகழலாம்” என்று எதிர்பார்ப்பதாக தேர்தல் ஆணையத் (இசி) தலைவர் அப்துல் அசீஸ் யூசுப் கூறினார்.

இன்று கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இசி தேர்தல் விதிகளில் அதற்கான திருத்தத்தைச் செய்து வருவதாக  சொன்னார்.

இந்தத் திருத்தத்தினால், வெளிநாட்டில் உள்ள அரசு ஊழியர்களும் மாணவர்களுக்கும் அவர்களின் மனைவிமார்களும் மட்டுமே  அஞ்சல்வழி வாக்களிக்கலாம் என்றிருக்கும் நிலை மாறி வெளிநாடுகளில் உள்ள மலேசியர் அனைவரும் அந்த உரிமையைப் பெறுவர்.

TAGS: