தமக்கு எதிரான குதப்புணர்சி II வழக்கில் நீதிமன்றம் திங்கள்கிழமை தமக்கு எதிராக தீர்ப்பளித்தால் அது அவருடைய கட்சிக்கு கூடுதல் வலுவைக் கொடுக்கும் என்று பக்கத்தான் எதிரணியின் தலைவர் அன்வார் கூறினார்.
இரண்டு ஆண்டுகளாக நடந்த அந்த வழக்கில் ஜனவரி 9 இல் அளிக்கப்படும் தீர்ப்பைத் தொடர்ந்து அமைதியின்மை ஏற்படுவதற்கான சாத்தியம் இருக்கிறது. தீர்ப்பு அளிக்கப்படும் நாளில் நீதிமன்றத்தின் முன் 100,000 அன்வார் ஆதரவாளர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீதிமன்றத்தின் முன் கூட வேண்டாம் என்று போலீசார் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். பெரும் மக்கள் போராட்டம் மலேசியாவின் அரசியல் நிலைப்பாட்டை பாதிப்பதோடு முதலீட்டார்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும். 2020 ஆம் ஆண்டு வாக்கில் மலேசியா ரிம444 பில்லியன் முதலீட்டை எதிர்பார்க்கிறது.
“அன்வார் சிறையில், இது அவர்களுக்கு நல்லதா இல்லையா?” என்பதை நஜிப்பின் ஆளும் கூட்டணி “முடிவு செய்ய வேண்டும்” என்று முன்னாள் நிதி அமைச்சரான அன்வார் ஒரு நேர்காணலில் ராய்ட்டரிடம் கூறினார்.
“இது அவர்களுக்கு நல்லதா என்பது எனக்குத் தெரியாது. நாங்கள் மக்களுக்கு விளக்கம் அளிப்பதற்கு அதிகப்படியான நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். (எதிரணி) சற்று கூடுதலான வலுமையுடன் எழும்பும்”, என்றாரவர்.
அன்வார், 64, குற்றவாளி என எதிர்வரும் திங்கள்கிழமை நீதிமன்றம் தீர்ப்பு அளித்தால் அவருக்கு இருபது ஆண்டுகால சிறைதண்டணை விதிக்கப்படலாம்.