தமிழ்ப்பள்ளிகளின் நிலப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும்: சேவியர்

தற்போது முக்கிய பிரச்சனையாக உள்ள தமிழ்ப்பள்ளிகளின் நிலப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் தெரிவித்தார்.

இதுவரை தமிழ்ப்பள்ளிகளின் பெயரில் பதிவுசெய்யப்படாமல் உள்ள நிலங்களை அந்தந்த தமிழ்ப்பள்ளிகளின் பெயரில் பதிவு செய்வதற்கு சிலாங்கூர் அரசாங்கம் மூலம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம் என்று; தமிழ்ப்பள்ளி நிலப்பிரச்சனை குறித்து நேற்று சிலாங்கூர் மாநில பணிமனையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் சேவியர் ஜெயகுமார் செம்பருத்தியிடம் தெரிவித்தார்.

தமிழ்பள்ளிகளின் நிலப்பிரச்சனைக்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தினால் தமிழ்ப்பள்ளிகளுக்காக மேற்கொள்ளப்பட்டுவரும் செயற்பாடுகள் குறித்தும் செம்பருத்திக்கு அளித்த நேர்காணலில் அவர் மேலும் குறிப்பிட்டார்.

செம்பருத்தி இணையத்தளத்திற்கு டாக்டர் சேவியர் ஜெயகுமார் வழங்கிய நேர்காணல் இணைக்கப்பட்டுள்ளது.

 

TAGS: