இப்ராஹிம் அலி இந்த முறையும் பதுங்கி விடுவாரா ?

“ஆர்ப்பாட்டங்கள் இனிமேலும் பொருத்தமாக இருக்காது” என நீங்கள் சொன்ன வார்த்தை எங்கே போனது ? இப்ராஹிம் அலி அவர்களே அதனையே நீங்கள் காப்பாற்றவில்லை.”

901 பக்காத்தானுடன் மோதுவதற்கு பெர்க்காசா திட்டமிடுகிறது

என்எம்என்டி: அந்த பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி 1990ம் ஆண்டுகளின் இறுதியில் ஆஸ்திரேலியாவில் பிரபலமாக திகழ்ந்த அரசியல்வாதியான பாலின் ஹான்சனை எனக்கு நினைவுபடுத்துகிறார். இனவாதக் கொள்கைகளை வலியுறுத்திய அவர், இப்போது எங்கே இருக்கிறார் என்பதே தெரியவில்லை. அவருடன் இப்ராஹிமும் விரைவில் சேர்ந்து கொள்வார்.

நான் எப்போதும் அன்வாரை ஆதரித்தது இல்லை. யார் பிரதமராகப் பொறுப்பேற்கிறார் என்பது எனக்கு முக்கியமல்ல. ஆனால் நாடு எப்படி ஆளப்படுகிறது  என்பதே எனக்கு முக்கியமாகும். நாம் ஒரு போராட்டத்தை ஆதரிக்கிறோம். தனிநபரை அல்ல.

நமது சருமம் எந்த நிறமாக இருந்தாலும் உள்ளுக்குள் ஒடும் ரத்தம் சிவப்பானதுதான். இனவாத அட்டையைப் பயன்படுத்துவது உங்களுக்கு நீண்ட காலத்துக்கு உதவாது.

கீ துவான் சாய்: போட்டிப் பேரணியை பெர்க்காசா ஏன் நடத்த வேண்டும்? தகராற்றை மூட்டுவதே அதன் நோக்கம் என்பது வெள்ளிடைமலை.

போலீஸ் அதனைக் கருத்தில் கொள்ள வேண்டும். பெர்க்காசா உறுப்பினர்கள் சாலைகளில் ஆர்ப்பாட்டம் செய்தால் அவர்களை போலீஸ் கைது செய்ய வேண்டும். ஆத்திரத்தை மூட்டுவதைத் தவிர அவர்களுக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை. அது இப்ராஹிம் அலியின் வார்த்தைகளே. அது பிஎன் ஆதரவு அமைப்பது உறுதியாகத் தெரிந்து விட்டது.

பென் ஹோர்: “ஆர்ப்பாட்டங்கள் இனிமேலும் பொருத்தமானவை அல்ல” என நீங்கள் கூறிய வார்த்தைகள் எங்கே போயின? இப்ராஹிம் அலி அவர்களே, அதனையே நீங்கள் காப்பாற்றவில்லை.

பெர்சே 2.0 பேரணியின் போது கலந்து கொள்வர் என நீங்கள் சொன்ன ஆயிரக்கணக்கான ‘சிலாட் வீரர்களை” மீண்டும் அழைக்க வேண்டாம். நீங்கள் உங்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதற்கு முன்னர் “உங்கள் உள்துறை” அமைச்சரிடம் அனுமதி கேளுங்கள்.

நம்பாதவன்: பெர்க்காசா மீண்டும் கூச்சல் போடுகிறது- அது குழப்பத்தை ஏற்படுத்தும் அகங்காரம் பிடித்த தேவதை (அல்லது சைத்தான்). 901 பேரணிக்கு முற்றுப்புள்ளி வைக்க போலீஸுக்கு காரணத்தை வழங்குவதற்காக போட்டிப் பேரணியை நடத்தப் போவதாக அந்த அம்னோ ஆதரவு ‘குண்டர் கும்பல்’ மருட்டுகிறது.

இதில் வினோதம் என்னவென்றால் இனவாத, நாட்டுத் துரோகக் கருத்துக்களை வெளியிட்டுள்ள  பெர்க்காசாவின் பெரிய கோமாளி இப்ராஹிம் அலி உட்பட அதன் தலைவர்கள் மீது இது வரை எந்தக் குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை என்பது தான். 

நீலகிரி: நீங்கள் சில குண்டர்களைக் கூலிக்கு அமர்த்தி உங்கள் எதிரிகளை எப்போது வேண்டுமானாலும் மருட்ட முடியும். வழக்கமாக அந்த குண்டர்களுக்கு அதிகார வர்க்கம் பாதுகாப்பு அளிக்கும். சட்டம் அவர்களை ஒன்றும் செய்யாது.

நடப்பு அரசியலில் வேலைகளை மற்றவர்களிடம் ஒப்படைப்பது வழக்கமான நிகழ்வாகும். ஒடுக்கப்படும் தரப்பு என்றாவது ஒரு நாள் வெடிக்கும் போது மக்கள் சட்டத்தை தங்கள் கரங்களில் எடுத்துக் கொள்வர்.

தான் செங் லியோங்: அமைதியாக பேரணியை நடத்துவதற்கு போலீஸுடன் அணுக்கமாக ஒத்துழைக்க பிகேஆர் தயாராகும் வேளையில் அந்த ‘தவளை’ வெளியில் வந்து நிலைமையை சிக்கலாக்க முயலுகிறது.

சாலை ஆர்ப்பாட்டங்கள் இனிமேலும் பொருத்தமாவை அல்ல என அந்தத் ‘தவளை’ கூறியதாக நான் நினைக்கிறேன். பெர்க்காசா இனிமேல் தெருவில் ஆர்ப்பாட்டம் செய்யாது என நான் எண்ணியிருந்தேன்.

உண்மையில் நான் 901 பேரணியில் பங்கு கொள்ள எண்ணவில்லை. ஆனால் இப்போது நிலைமை சூடாகி வருகிறது. அதனால் நான் என் கேமிராவுடன் போகப் போகிறேன்.

புளாக்ஸ்மித்: இப்ராஹிம் அலி மிகத் தெளிவாகச் சொல்லி விட்டார். ஊர்வலமாக சென்று ஆத்திரத்தை மூட்டுவதே தங்கள் நோக்கம் என்று. அது வன்முறை மருட்டல் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை.  அதே வேளையில் மற்ற தரப்பு அமைதியாகக் கூடப் போவதாக கூறியுள்ளது.

வன்முறையைப் போதிப்பதற்கு எதிராக சட்டங்கள் உள்ளன. போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் போலீஸ் பாகுபாடு காட்டுகிறது என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு ஆகும்.

கேகன்: பக்காத்தான் ராக்யாட் ஏதாவது செய்யும் போது அதனை எதிர்க்க அந்த அரசியல் கோமாளி எதையாவது அறிவிக்கிறார். அவர் அரசியல் கோமாளி மட்டுமல்ல. அம்னோவின் கோமாளியும் ஆவார்.

மாய மலை: பேரணியில் நீங்கள் கலந்து கொள்வதற்கு மனைவி அனுமதிக்கவில்லை என நீங்கள் கடைசியாகச் சொல்லப் போகின்றீர்கள்!!!!

TAGS: