அன்வாருக்கு ஆதரவு கொடுத்த ஆறு பெர்சத்து எம்.பி.க்கள் உடனடி நீக்கம்

பிரதமர் அன்வார் இப்ராகிமின் அரசுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்த 6 எம்.பி.க்களின் உறுப்பினர் பதவியை பெர்சத்து கட்சி ரத்து செய்துள்ளது.

உடனடியாக பதவி நீக்கம் செய்வதற்கான நோட்டீஸ் வழங்கப்பட்ட ஆறு எம்.பி.க்கள் (மேலே இடமிருந்து  வலம்) இஸ்கந்தர் துல்கர்னைன் அப்துல் காலித் (குவாலா கங்சார்), சுஹைலி அப்துல் ரஹ்மான் (லாபுவான்), அஸிஸி அபு நைம் (குவா முசாங்), டாக்டர் சுல்கஃபேரி ஹனாபி (தஞ்சோங் கராங்), சையத் அபு ஹுசின் ஹபீஸ் சையத் அப்துல் பைசல் (புக்கிட் கன்டாங்) மற்றும் ஜஹாரி கெச்சிக் (ஜெலி).

இன்று ஒரு அறிக்கையில், கட்சியின் பொதுச்செயலாளர் ஹம்சா ஜைனுதீன், ஜூன் 7 அன்று அதன் உச்ச கவுன்சிலின் முடிவைத் தொடர்ந்து, நேற்றிரவு பெரிக்காத்தான் நேஷனல் சுப்ரீம் கவுன்சில் கூட்டத்தில் தெரிவித்த பின்னர், ஆறு எம்.பி.க்களுக்கு உடனடி நீக்கம் குறித்த அறிவிப்புகளை கட்சி வழங்கியதாகக் கூறினார்.

“(கட்சி) தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு பிரதிநிதிகளுக்கு பெர்சத்து கட்சி அரசியலமைப்பின் 10.4 வது பிரிவிற்கு இணங்காததற்காக உடனடியாக நீக்கம் செய்வதற்கான அறிவிப்புகளை வழங்கியுள்ளது,” என்று அவர் கூறினார்.

சமீபத்தில் திருத்தப்பட்ட கட்சி அரசியலமைப்பின்படி, டேவான் ரக்யாட் உறுப்பினர் அல்லது மாநில சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் எந்தவொரு பெர்சாத்து உறுப்பினரும் கட்சியின் உச்ச கவுன்சிலின் உத்தரவுகளுக்கு இணங்காதவர் உடனடியாக அவரது உறுப்பினர் பதவியை இழப்பர்.

கட்சி அரசியலமைப்பின் 10.2.6 வது பிரிவின் கீழ் மே 17 அன்று லாபுவான் எம்.பி சுஹைலிக்கு பணிநீக்கம் கடிதம் அனுப்பப்பட்டதாகவும் ஹம்சா மீண்டும் வலியுறுத்தினார்.

இந்த ஷரத்தின் கீழ், கட்சி உறுப்பினர் ஏதேனும் கட்சி விவகாரம் அல்லது கட்சி உறுப்பினர் தொடர்பான எதையும் நீதிமன்றத்திற்குக் கொண்டுவந்தால் அவர் அல்லது அவள் உறுப்பினர் அவரது உறுப்புரிமை ரத்து செய்யப்படுவார்.

அரசியலமைப்பின் 49(A) பிரிவு மற்றும்/அல்லது தொடர்புடைய மாநில அரசாங்க சட்டங்களின் கீழ் கட்சியின் அரசியலமைப்பு மற்றும் நாட்டின் சட்டங்களுக்கு இணங்க இந்த செயல்முறை இருப்பதாக ஹம்சா கூறினார்.