காலை5.00 மணியளவில் ஒரு குடும்பத்தை பிடித்து RM600,000 மதிப்புள்ள பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களுடன் கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர்.
12 பேர் கொண்ட ஆயுதமேந்திய கும்பல் ஜாலான் ஜகோங், பண்டமாரன், கிள்ளான் என்ற இடத்தில் உள்ள அவர்களது மூன்று மாடி பங்களாவுக்குள் நேற்று அத்துமீறி நுழைந்தனர்..
முகமூடி அணிந்த கொள்ளையர்கள் அதிகாலை 5 மணியளவில் இரண்டு கார்களில் வந்ததாக கிள்ளான் செலாத்தான் காவல்துறைத் தலைவர் சா ஹூங் போங் கூறினார்.
அவர்கள் சுவரில் ஏறி, பிரதான கதவின் இரும்புத் தகட்டை வலுக்கட்டாயமாகத் திறந்தனர்.
அங்கு இருந்த 3 பேரையும் கட்டி போடும் முன் கொள்ளையர்கள் எழுப்பினர்.
அவர்கள் அனைத்து அறைகளையும் சூறையாடி பணம்,சாமி சிலை மற்றும் நகைகளுடன் தப்பிச் சென்றனர்.
இழப்பு ரிம 6 லட்சம் என்று மதிப்பிட்டனர், கொள்ளையர்கள் பாராங்கத்திகளை ஏந்தியிருந்தனர் என்றும் கூறினார்.
கொள்ளையின் போது, வீட்டில் இருந்தவர்களில் ஒருவர் காலை 6.16 மணியளவில் போலிசாருக்கு போன் செய்ததால் சம்பவ இடத்திற்கு ரோந்து வாகனம் அனுப்பப்பட்டது.
அதற்குள் கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான, 37 வயதுடைய நபர், இடது தோள்பட்டையில் வெட்டப்பட்டதாகவும், கிள்ளானில் உள்ள பந்தாய் மருத்துவமனையில் அவரது காயத்திற்கு நான்கு தையல்கள் போடப்பட்டதாகவும் சா கூறினார்.
உள்ளூர்வாசிகள் என நம்பப்படும் சந்தேக நபர்களைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை காவல்துறை தீவிரப்படுத்தி வருகின்றனர்.