வெப்பம் தணிந்ததும் பலாத்காரம் காட்டப்படும்

துரதிஷ்டவசமாக நீங்கள் ஒரு நீதிபதியை சந்திக்கும் எந்த சூழ்நிலையிலும் அவரை ஊழல் பேர்வழி என்றே நீங்கள் உடனடியாக எண்ணுகின்றீர்கள்.”

திங்கட்கிழமை கிழமை தீர்ப்பு “குற்றவாளி அல்ல” என தீர்ப்பளிக்கப்பட்டால்?

நியாயம்: நாம் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கும் நீதிபதி ஜபிடின் முகமட் டியாவுக்கும் நாம் அனைவரும் இறைவனை வேண்டுவோம்- நியாயமான, நீதியான தீர்ப்பை வழங்கும் வகையில் இறைவன் நீதிபதியின் உள்ளத்தைத் தொட வேண்டும்.

நீதிபதி அரசாங்கத்தின் தில்லுமுல்லுக்கு பணிந்து விட்டால் அவர் அந்த பாவத்துடன் என்றும் வாழ வேண்டும். ஒரு நாளைக்கு ஐந்து முறை அல்லது பத்து முறை தொழுதால் கூட அந்தப் பாவத்திலிருந்து அவர் விடுபட முடியாது. அவர் எஞ்சியுள்ள தமது வாழ் நாள் முழுவதும் குற்ற உணர்வுடன் வாழ வேண்டியிருக்கும்.

பெர்ட் தான்: கட்டுரையாளர் எம் கிருஷ்ணமூர்த்தி திங்கட்கிழமையன்று வழங்கப்படக் கூடிய சாத்தியமான தீர்ப்பை மறந்து விட்டார். அதாவது ‘தீர்ப்பு இன்னொரு நாளைக்குத் தள்ளி வைக்கப்படுகிறது’

அன்வார் நாடு முழுவதும் கலந்து கொண்ட சொற்பொழிவுக் கூட்டங்களில் அதிகமான மக்கள் கலந்து கொண்டிருப்பதும் நீதிமன்ற வளாகத்தில் 901 பேரணியும் நீதித் துறை மீதும் அம்னோவின் மீதும் நெருக்குதலை ஏற்படுத்தியுள்ளது என்பது வெள்ளிடைமலை.

நாளை அன்வாருக்குப் பதில் கிடைக்காமல் போகக் கூடும். நாம் யாரும் கவனிக்காத நேரத்தில் நெருக்கடியின் வெப்பம் தணிந்ததும் பலாத்காரம் காட்டப்படும்.

ஆர்பி ஹிஷாம்: 13வது பொதுத் தேர்தல் முடிவுகள் மீதான எளிய கணக்கே அதுவாகும். குற்றவாளி என்றால் பிஎன் வெளியேற்றப்படும். விடுதலை என்றால் அது 55 விழுக்காடு வெளியேற்றப்படும் சாத்தியம் உள்ளது.

அடையாளம் இல்லாதவன்_4182: அந்த வழக்கில் எதிர்மறையான தீர்ப்பை மக்கள்  எதிர்ப்பார்ப்பதற்கு மலேசிய நீதித் துறை மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போனதே காரணமாகும்.

அன்வார் வழக்கில் மக்களுடைய நடவடிக்கைகளே அதற்குத் தக்க சான்று. துரதிஷ்டவசமாக நீங்கள் ஒரு நீதிபதியை சந்திக்கும் எந்த சூழ்நிலையிலும் அவரையும் அரசியல்வாதியைப் போன்று ஊழல் பேர்வழி என்றே நீங்கள் உடனடியாக எண்ணுகின்றீர்கள்.

கேகன்: விவேகமும் நியாயமான சிந்தனையும் இருந்தால் அன்வார் விடுதலை செய்யப்படுவார். உண்மையில் விவேகமும் நியாயமான சிந்தனையும் இருந்திருந்தால் அவர் மீது முதலில் குற்றமே சாட்டப்பட்டிருக்கக் கூடாது.

வாதங்கள் எவ்வளவு நியாயமானதாக இருந்தாலும் அன்வார் குற்றவாளி அல்ல எனத் தீர்ப்பளிக்கப்படுவதற்கு கொஞ்சம் கூட வாய்ப்பே இல்லை. காரணம் அம்னோ நியாயத்துக்குக் கட்டுப்படும் கட்சி அல்ல.

அது பழி வாங்கும் பண்பாட்டைக் கொண்டது. குறுகிய கால ஆதாயத்துக்காக எதனையும் செய்யும். அது எதிர்காலத்தையோ அல்லது மறைமுகமான விளைவுகளையோ சிந்தித்துப் பார்க்கும் பக்குவம் இல்லாதது.

TAGS: