அன்வார் தீர்ப்பை செவிமடுக்க டூத்தா நீதிமன்ற வளாகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள்

கோலாலம்பூர் ஜாலான் டூத்தாவில் அமைந்துள்ள நீதிமன்ற வளாகத்தின் ஐந்தாவது மாடியில் உள்ள மூன்றாவது நீதிமன்றத்தில் இன்று காலை குதப்புணர்ச்சி வழக்கு IIல் தீர்ப்பு வழங்கப்படுகிறது.

கடந்த 15 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக குதப்புணர்ச்சி குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்

அந்தக் குற்றச்சாட்டை அரசியல் சதி என 64 வயதான அன்வார் இப்ராஹிம் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வந்துள்ளார்.

நீதிபதி முகமட் ஜபிடின் முகமட் டியா காலை 9 மணி வாக்கில் தீர்ப்பை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிகேஆர், பாஸ், டிஏபி ஆகியவற்றைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்காத்தான் ராக்யாட் ஆதரவாளர்கள் அதிகாலை மணி 4.00 தொடக்கம் ஜாலான் டூத்தா கார் நிறுத்துமிடத்தில் ஒன்று கூடத் தொடங்கியுள்ளனர்.

இதனிடையே பெர்க்காசா தனது போட்டிப் பேரணியை நீதிமன்ற வளாகத்துக்கு வெளியில் உள்ள கூட்டர்சுப் பிரதேச பள்ளிவாசலில் நடத்தவிருக்கிறது.