அன்வார் விடுதலை நீதிக்கு கிடைத்த வெற்றி, சேவியர்

உயர் நீதிமன்ற நீதிபதி முகமட் ஷபிடின் வழங்கிய அன்வார் இப்ராஹிம் குதப்புணர்ச்சி குற்றவாளி அல்ல என்று தீர்ப்பை வரவேற்கிறோம் என்று தமது செய்தில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சேவியர் ஜெயக்குமார் கூறினார்.
இது மகிழ்சிகரமான ஒன்று. அன்வாருக்கு நீதி கிடைக்க எல்லா வகையிலும் துணை நின்ற மலேசிய மக்களுக்கும் அனைத்து பக்காத்தான் உறுப்பினர்களுக்கும் நீதிக்கும் கிடைத்த வெற்றியாக நாம் இதனைக் கருதவேண்டும்.
அரசாங்கத் தரப்பால் டிஎன்எ ரசாயன சோதனைகளின் ஆய்வுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க  முடியவில்லை என்பதை நீதிபதி தனது தீர்புக்கு முக்கிய காரணமாக எடுத்துக் கொண்டுள்ளார். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இந்தக் குற்றச்சாட்டிலிருந்து நீண்ட காலத்திற்கு முன்பே அன்வார் விடுதலை பெற்றிருக்க வேண்டும்.

அவ்விசாரனை இவ்வளவு காலம் இழுக்கடிக்கப்பட்டதின் வழி மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அதற்கு அரசியலே முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.
ஆதாரமற்ற இது போன்ற வழக்குகளில் மக்களை சிக்க வைத்து அவர்கள் மற்ற விசயங்களில் ஈடுபட முடியாது வீட்டுக்கும் நீதிமன்றத்துக்கும் இழுத்தடிப்பது வேதனைக்குறியது. சரியான ஆதாரமற்ற இவ்வழக்கு நீண்ட நாட்கள் இழுக்கடிக்கப்பட்டதால் நாட்டுக்கும் மக்களுக்கும் தேவையற்ற  பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, அன்வார்  நம் நாட்டின் முன்னாள் நிதியமைச்சராவார். அவர் சிலாங்கூர்  மாநிலத்துக்கு பொருளாதார ஆலோசகராக இருப்பதால், இவ்வழக்கு இல்லாமலிருந்தால் அவர் இன்னும் ஆக்ககரமான சேவையை இம்மாநில மக்களுக்கு வழங்கியிருக்க முடியும் என்று சேவியர் அவரது செய்தியில் மேலும் கூறினார்.

TAGS: