“பழி வாங்கும் அம்னோ போக்கையும் சாத்தியங்களையும் ஆராயும் போது நீதிபதி துணிச்சலாக அந்த முடிவுக்கு வந்திருக்கிறார்.”
குதப்புணர்ச்சி வழக்கு II தீர்ப்பு: அன்வார் குற்றவாளி அல்ல!
கேகன்: உயர் நீதிமன்ற நீதிபதி தம்மைக் கட்டுப்படுத்தி வரும் ஊழல் சக்திகளை எதிர்த்து நிற்க முடிவு செய்தாரா அல்லது அன்வார் இப்ராஹிமை விடுவிக்க அம்னோ முடிவு செய்ததா?
இதில் மிக முக்கியமான விஷயம், ஜபிடின் இதற்கு பின்னர் ஒய்வு பெறப் போகிறார். ஆகவே பதவி உயர்வு பெறுவது அவரது சிந்தனையில் இல்லை. உண்மையாகச் சொன்னால் விசாரணையின் போது ஜபிடின் மிகவும் நியாயமாக நடந்து கொள்ளவில்லை. அவர் அன்வாரை குற்றவாளி எனத் தீர்ப்பளிப்பார் என்பதற்கான அறிகுறிகள் அதிகமாக இருந்தன.
அதற்கான பதில் நமக்கு ஒரு போதும் கிடைக்கப் போவதில்லை என்றாலும் பழி வாங்கும் அம்னோ போக்கையும் சாத்தியங்களையும் ஆராயும் போது நீதிபதி துணிச்சலாக அந்த முடிவுக்கு வந்திருக்கிறார் என நான் எண்ணுகிறேன்.
தாங்கள் வெகுவாக சிரமப்பட்ட பின்னர் அன்வாரை சுதந்திரமாக வெளியே செல்ல அம்னோ அனுமதித்திருக்குமா என சற்று சிந்தித்துப் பாருங்கள். அவர் குறைந்த பட்சம் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு ஈராயிரம் ரிங்கிட்டுக்கும் மேற்போகாத அபராதம் விதிக்கப்பட்டு அரசியலிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
மிலோசெவிக்: அன்வாருக்கு என் அறிவுரை. உங்களுக்கு உண்மையிலேயே தெரியாத இளைஞர்களை உங்களுடன் பணி புரிய இனிமேல் அனுமதிக்க வேண்டாம்.
நாட்டின் கவனம் இது போன்ற விஷயங்களில் திசை திரும்பக் கூடாது. நீங்கள் செய்ய வேண்டிய வேலையில் கவனம் செலுத்துங்கள். எல்லா நேரத்திலும் உங்கள் மனைவியுடன் செல்லுங்கள். பொது இடங்களில் கூட்டங்களை நடத்துங்கள். மறைவாக ஆடம்பர அடுக்கு மாடி வீடுகளில் அல்ல.
டிபாலா: மிக்க மகிழ்ச்சி அடைய வேண்டாம். நாம் அரையிறுதி (முறையீட்டு நீதிமன்றம்) இறுதி (கூட்டரசு நீதிமன்றம்) ஆகியவற்றிலும் வெற்றி பெற்றால் மட்டுமே முழு மகிழ்ச்சி அடைய முடியும்
அம்னோ பாணி தெரிந்த விஷயமாகும். இங்கு தோல்வி கண்டு முறையீட்டு நீதிமன்றம் அல்லது கூட்டரசு நீதிமன்றத்தில் வெற்றி காண்பதை அது விரும்பக் கூடும். நீதிமன்றங்கள் நியாயமாக நடந்து கொள்கின்றன என்பதைக் காட்டுவதே அதன் நோக்கம்.
அது முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார் முகம கிர் தோயோவை தோல்வி காணச் செய்துள்ளது. அன்வாரை வெற்றி அடையச் செய்துள்ளது. எல்லாவற்றுக்கும் ஏதாவது காரணம் இருக்க வேண்டும்.
பார்வையாளன்: அந்த வழக்கு விசாரணை நேர்மையற்ற முறையில் நடத்தப்பட்டது. அந்த ‘கங்காரு நீதிமன்றத்தை’ பயன்படுத்தி பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அன்வாரை ஜெயிலுக்கு அனுப்பப் போகிறார் என்பதை உணர்த்தியது.
‘குற்றவாளி அல்ல’ என்ற தீர்ப்பு நாம் அறிந்த நஜிப்பின் உறுதியற்ற போக்கை மீண்டும் பிரதிபலித்துள்ளது. அவர் கடைசி நேரம் வரை என்ன செய்வது என்பது தெரியாமல் தடுமாறியிருக்க வேண்டும்.
இறுதியில் அன்வாரை சிறைக்கு அனுப்பாமல் இருப்பதே தமக்கு நல்லது என அவர் முடிவு செய்திருக்க வேண்டும். அத்துடன் அதே தந்திரத்தை பின்பற்றிய டாக்டர் மகாதீர் முகமட்டை மலாய் வாக்காளர்கள் தண்டித்தது நஜிப்-புக்கு நினைவுக்கு வந்திருக்க வேண்டும். அப்போது மகாதீரை சீன வாக்காளர்கள்தான் காப்பாற்றினார்கள்.
இப்போதும் அவர் அன்வாரை ஜெயிலுக்கு அனுப்பினால் மலாய்க்காரர்கள் அதே பாணியில் தண்டித்து விடக் கூடிய சாத்தியம் உண்டு. பிஎன் -னுக்கான சீன ஆதரவு முற்றாக குறைந்து விட்டது. அந்தச் சூழ்நிலையில் வரும் தேர்தலில் பிஎன் தோல்வி காண வேண்டியிருக்கும்.
என்றாலும் உறுதியற்ற தமது குணத்திற்கு ஏற்ப நஜிப் தமது எண்ணத்தை மாற்றிக் கொண்டு முறையீடு செய்து கொள்ள முடிவு செய்து அன்வாரை ஜெயிலுக்கு அனுப்புமாறு முறையீட்டு நீதிமன்றங்களில் உள்ள “கங்காருக்களை” பயன்படுத்தக் கூடும்.
என்ன நடந்தாலும் நல்ல சிந்தனையுள்ள அனைத்து மலேசியர்களுடைய கவனமும் ‘அம்னோவைத் தவிர எதுவாக இருந்தாலும் பரவாயில்லை’ என்பதில் இருக்க வேண்டும்.
இதுதான்வழி: 2012 பல புதிய தொடக்கங்களைக் கண்டுள்ளது. கடல் நாக ஆண்டு மலேசியாவுக்கும் மலேசியர்களுக்கும் அதிர்ஷ்டத்தை கொண்டு வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
1. அன்வார் இப்ராஹிம் குதப்புணர்ச்சி குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
2. இரண்டு மூத்த அம்னோ உறுப்பினர்கள் டிஏபி-யில் இணைந்துள்ளனர்.
3. அன்வார் இப்ராஹிமிடம் ஜைட் இப்ராஹிம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார்.
.4. ஹசான் அலி பாஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
5. பல்கலைக்கழக மாணவர்களிடையே அரசியல் விழிப்புணர்வு மேலோங்கி வருகிறது.
6. மசீச- இரண்டு மூத்த உறுப்பினர்கள் விலகியதால் நொறுங்கிக் கொண்டிருக்கிறது.
7. என்எப்சி- அம்னோவுக்கு பயங்கரக் கனவாகும்.
8. பெர்சே 2.0 வெற்றி அடைந்துள்ளது.
1மலேசியா: மக்கள் வரிப்பணத்தையும் நேரத்தையும் அதிகம் விரயம் செய்து விட்ட சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்ல் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நிறைய ஆதாரங்கள் உள்ள நிச்சயம் வெற்றி பெறக் கூடிய வழக்கைத் தொடுக்க, சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?