விடுதலை, பிஎன் வீசும் கடைசி பகடைக் காயா?

“அதற்கு, அந்தத் தீர்ப்பு மோசம் அவ்வளவு கடுமையாக இல்லாத தேர்வாகும். அது அதற்கு சிறந்த தேர்வல்ல. என்றாலும் மற்ற தேர்வுகள் அதை விட மோசமான விளைவுகளைக் கொண்டிருக்கும்.”

பிஎன் னை மேலும் வீழ்ச்சி காண்பதிலிருந்து வேறு ஏதும் காப்பாற்ற முடியுமா?

அர்ச்சன்: முகமட் ஜபிடின் முகமட் டியா அந்த வழக்கை உடனடியாக தூக்கி எறிந்திருக்கலாம். அவர் அப்படிச் செய்திருந்தால் குதப்புணர்ச்சி வழக்கு II விசாரணை நீதிபதிக்கு இன்னொரு மகுடமாக அமைந்திருக்கும்.

ஆனால் அவர் அந்த வழக்கை இவ்வளவு காலம் நீடிக்க அனுமதித்து விட்டார். ஒரு சமயத்தில் அவர், புகார்தாரர் முகமட் சைபுல் புஹாரி அஸ்லானை உண்மையான சாட்சி என்று கூட குறிப்பிட்டுள்ளார்.

பிரதிவாதித் தரப்பு வாதத்தைச் செவிமடுக்காமல் அவ்வாறு நீதிபதி சொன்னது அவருக்கு பெருமை சேர்ப்பதாக இல்லை.

அவர் தமது மனச்சாட்சி காரணமாக அன்வாரை விடுவிக்கவில்லை. அம்னோவுக்கு மேலும் சேதம் ஏற்படாமல் காப்பாற்றுவதற்காக அம்னோ வழங்கிய  உத்தரவின் பேரில் நீதிபதி அதனைச் செய்துள்ளார்.

விபி பிடென்: அந்த வழக்கு விசாரணையை முழுமையாக அறியாத, சைபுல் பிரதமர் நஜிப்  ரசாக்கைச் சந்தித்தது, அதனை நஜிப் மறுத்தது, சைபுல் இரண்டு நாட்களுக்கு மலம் கழிக்காதது போன்ற விஷயங்களை அறியாத மக்களுடைய ஆதரவை மீண்டும் பெறுவதற்காக பிஎன் வீசியுள்ள கடைசி பகடைக் காய் அது என நான் நம்புகிறேன்.

பக்காத்தான் ராக்யாட் இப்போது பிஎன் குரல் வளையைப் பிடித்துள்ளது. அந்த ஆட்சி மீது இறுதித் தாக்குதலைத் தொடுக்க அது தயாராகி வருகிறது. அந்த கங்காரு நீதிமன்ற விசாரணை, பிஎன் அமைப்பின் ஊழல் மலிந்த, இனவாத நடைமுறைகள் கிராமப்புற மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். சரவாக்கியன்_3ff9: நஜிப் நம்மை முட்டாளாக்க முடியாது.

 அந்தத் தீர்ப்பு அரசியல் ரீதியில் நிர்ணயம் செய்யப்பட்டது என்பதை நாம் அறிவோம். நஜிப் ஆழ் கடலுக்கும் பேய்க்கும் இடையில் சிக்கிக் கொண்டு விட்டார். அவர் எந்தப் பக்கம் போனாலும் கதை முடிந்தது.

அந்த வழக்கு நஜிப் கழுத்தைச் சுற்றிய பாம்பு போல தொங்கிக் கொண்டிருப்பதால் அன்வாரை விடுவிப்பதுதான் தமக்கு நல்லது என அவர் முடிவு செய்திருக்க வேண்டும். அந்தத் தீர்ப்பு வழங்கப்பட்ட விதத்தைப் பாருங்கள். அவர் யாருக்கோ பதில் அளிப்பதைப் போன்று உள்ளது.

நியாயமானவன்:  அந்தக் கட்டுரையை எழுதிய அப்துல் அஜிஸ் பேரி-யின் கருத்துக்களை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.  மக்கள் இப்போது விவேகமாக சிந்திக்கத் தொடங்கி விட்டனர் என்பதே உண்மை. நிறைய கோருகின்றனர். அதிகார வர்க்கம் அதனை ஒப்புக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நீடித்த அந்த விசாரணை, வகுக்கப்பட்ட சதி திட்டத்தைப் போல நிகழவில்லை. இரண்டு பேய்களில், விடுதலை குறைந்த பாதிப்பைக் கொண்டது என முடிவானது.

இனவாத எதிர்ப்பாளன்: அன்வாரை நீதிமன்றம் விடுவித்துள்ள போதிலும் பிஎன் அரசாங்கச் செல்வாக்கிலிருந்து நீதித் துறை முழுமையாக விடுபட்டு விட்டதாகக் கூற முடியாது. அந்த வழக்கில் பல கேள்விகளுக்குப் பதில் கிடைக்கவே இல்லை.

சைபுல் ஏன் நஜிப்பைச் சந்தித்தார் என்பதை நீதிபதி விளக்கவே இல்லை. குதப்புணர்ச்சி நிகழ்ந்ததாகக் கூறப்படும் அதே நாளில் சைபுல் ஏன் மருத்துவரைக் காணவில்லை என்பதும் விளக்கப்படவில்லை.

தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவருடைய கண்டு பிடிப்புக்கும் அரசாங்க மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவருடைய கண்டு பிடிப்புக்கும் இடையில் ஏன் இவ்வளவு வேறுபாடுகள்?

குவினோபாண்ட்: நீதித்துறை சுதந்திரமாக இயங்குகிறதா இல்லையா என்பது கூட்டரசு நீதிமன்றத்தில்தான் உறுதி செய்யப்படும்.

அடையாளம் இல்லாதவன்: பொது மக்கள் ஆதரவு இவ்வளவு பெரிதாக இருக்கும் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை. நீதித்துறையில் தலையீடு இருந்ததற்கு பல வழக்குகள் சான்று கூறுகின்றன.

தாங்கள் நிலை நிறுத்தப் போவதாக சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொள்ளும் விஷயத்தை சில நீதிபதிகள் நிலை நிறுத்துவதில்லை.

பணமும் ஒய்வுக்கால சகாயங்களும் சத்தியப் பிரமாணத்தைக் காட்டிலும் பெரிதாகி விடுவதே அதற்குக் காரணம் என நான் எண்ணுகிறேன். வலுவான நீதித்துறைக் கோட்பாடுகளை பின்பற்றாத சட்ட குளறுபடிகளே அவர்கள். 

சிம்போப்வே: அரச மலேசிய போலீஸ் படை, சட்டத் துறைத் தலைவர் அலுவலகம், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், பெட்ரோனாஸ் ஆகியவற்றின் கட்டுப்பாட்டையே பிஎன் அதிகாரம் சார்ந்துள்ளது.

தங்களது ஒய்வுக்கால திட்டங்கள் விரைவில் பாழாகி விடுமோ என பல அம்னோ தலைவர்கள் அச்சப்படத் தொடங்கியுள்ளனர்.

சோஷலிஸ்ட்007: அம்னோ/பிஎன் தனது புதை குழியைத் தானே தோண்டிக் கொண்டுள்ளது. அவை எந்த நேரத்திலும் அதில் விழக் கூடும்.

TAGS: