ஆனால் அழிக்க முடியாத மைக்கு இவ்வளவு எதிர்ப்பு ஏன்?

“அப்துல் அஜிஸ் சொல்லும் காரணம் முட்டாள்தனமாக இருக்கிறது. அழிக்க முடியாத மை வாக்களிப்பதற்கான யாருடைய உரிமையையும் பறிக்கவில்லை.”

 

 

 

 

இசி தலைவர்: கைவிரல் ரேகை முறையில் அழிக்க முடியாத மையைக் காட்டிலும் கூடுதல் பிரச்னைகள்

பென்-காஸி: அழிக்க முடியாத மை திறமையானது என்பதை தேர்தல் ஆணைய-இசி தலைவர் அப்துல் அஜிஸ் யூசோப் ஒரு வழியாக ஒப்புக் கொண்டுள்ளார். இதற்கு முன்பு அவர் ஏன் அவ்வளவு பிடிவாதமாக இருந்தார்?

2008ல் ஏன் அழிக்க முடியாத மை பயன்படுத்தப்படவில்லை என்ற கேள்விக்குப் பதில் அளித்த இசி தலைவர்,” பதிவு செய்யப்பட்ட எந்த வாக்காளரையும் வாக்களிப்பதிலிருந்து தடுக்கக் கூடாது என கூட்டரசு அரசியலமைப்பு கூறுவதே அதற்குக் காரணம்”, என்றார்.

சிலருக்கு மை ஒத்துக் கொள்ளாது என்று கூட அப்துல் அஜிஸ் சொன்னார். மற்ற நாடுகளில் யாருக்காவது மை ஒத்துக் கொள்ளாமல் போயிருக்கிறதா? விதண்டாவாதம்.

வீரா: சாதாரணமாக இருப்பதே சிறந்ததாகும். உலகில் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் அது பயன்படுத்தப்படுகிறது. அங்கு ஒரு கட்சியிடமிருந்து இன்னொரு கட்சிக்கு ஆட்சி மாற்றம் சுமூகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நியாய சிந்தனை கொண்ட அனைத்து மலேசியர்களும் அதனை ஏற்றுக் கொள்வர்.

டேனி லோ: பதிவு செய்யப்பட்ட எந்த வாக்காளரையும் வாக்களிப்பதிலிருந்து தடுக்கக் கூடாது என கூட்டரசு அரசியலமைப்பு கூறுவதால் கை விரல் ரேகை முறை, அழிக்க முடியாத மையைப் பயன்படுத்த முடியாது என தேர்தல் ஆணையத் தலைவர் சொல்வது அபத்தமானது.

நடப்பு முறையின் கீழ் பல வாக்காளர்கள் குடிமக்கள் என்னும் முறையில் தங்களது உரிமையைப் பயன்படுத்துவதிலிருந்து இசி தடுத்துள்ளது. அதற்கு அவர்கள் வேறு வாக்குச் சாவடிகளுக்கு மாற்றப்பட்டு அங்கு அவர்கள் போய்ச் சேர்ந்ததும் வேறு யாரோ ஒருவர் அவர்களுக்கு வாக்களித்து விட்டதே காரணம்.

அத்தகைய புகார்களைக் கருத்தில் கொண்டால் அழிக்க முடியாத மையே ஒருவர் இரண்டு முறை வாக்களிப்பதைத் தடுக்க முடியும். ஆவி வாக்காளர்கள் பல முறை வாக்களிப்பதையும் நிறுத்த முடியும்.

அழிக்க முடியாத மை வாக்களிப்பதிலிருந்து பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களை நிறுத்தப் போவதில்லை.

ஒருவர் பல முறை வாக்களிப்பதையே தடுக்கிறது. அதுவே அரசியலமைப்புக்கு முரணானது.

கேகன்: அப்துல் அஜிஸ் சொல்லும் காரணம் முட்டாள்தனமாக இருக்கிறது. அழிக்க முடியாத மை வாக்களிப்பதற்கான யாருடைய உரிமையையும் பறிக்கவில்லை.

ஒருவர் இரு முறை வாக்களிப்பதையே அது தடுக்கிறது. ஆகவே அரசியலமைப்பு திருத்தப்பட வேண்டும் என்பது அபத்தமானது. தாமதப்படுத்தும் தந்திரமாகும்.

எல் ஜோய்: ஆள்காட்டி விரலில் போடப்படும் மை குறியீட்டை அழிக்க முடியுமா என்பதை அழிக்க முடியாத மை பற்றி அறிந்தவர்கள் விளக்கினால் நல்லது.

சில வாக்குச் சாவடிகள் குறிப்பிட்ட மையைப் பயன்படுத்தாமல் எளிதாக சிறப்பு ரசாயனத்தைக் கொண்டு அழிக்கக் கூடிய மையை பயன்படுத்தும் சாத்தியம் உள்ளதா?

அத்தகைய சாத்தியம் இருந்தால் நாம் இசி-யை நம்பக் கூடாது. வாக்காளர் பட்டியலில் அது ஏற்கனவே பல ‘கறைகளை’ ஏற்படுத்தி விட்டது.

இரண்டாவதாக நூறாயிரக்கணக்கான சட்டவிரோதக் குடியேற்றக்காரர்களுக்கு அடையாளக் கார்டுகளை வழங்கும் தேசியப் பதிவுத் துறை நடவடிக்கையை அது எந்த விதத்திலும் தடுக்கப் போவதில்லை.

கேஎஸ்என்: மலேசிய வாக்காளர்கள் அழிக்க முடியாத மையை விரும்புகின்றனர். ஆனால் அம்னோ குறித்து அஞ்சுவதால் இசி அதற்கு தயாராக இல்லை. சாதாரண விஷயத்தை ஆய்வு செய்ய சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் ஏன் இவ்வளவு காலம் எடுத்துக் கொள்கிறது?

அர்மகெடோன்: ‘கைவிரல் ரேகை முறை’ ஏட்டளவில் “முழுமையாக” தெரிந்தாலும் நடைமுறையில் பல பலவீனங்களைக் கொண்டுள்ளதாக இசி தலைவர் அப்துல் அஜிஸ் சொல்கிறார். அஜிஸ் அவர்களே, பலவீனங்களே நீங்கள்தான்.

TAGS: