பாஸ்:901 பேரணி ஆர்ப்பாட்டக்கார்கள் ஏன் தங்களுக்கே வெடி வைத்துக்கொள்ள வேண்டும்?

கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் மூன்று குண்டுகளையும் பதுக்கி வைத்தவர்கள் பக்காத்தான் ரக்யாட் ஆதரவாளர்களே என்று கூறப்படுவது நம்பத்தக்கதாக இல்லை என்கிறார் பாஸ் உதவித் தலைவர் மாபூஸ் ஒமார்.

ஏனென்றால், அக்குண்டுகள் வெடித்தில் பக்காத்தான் ஆதரவாளர்கள்தான் காயமடைந்தார்கள், அவர்களின் வாகனங்கள்தான் சேதமடைந்தன.

“அன்வாரின் ஆதரவாளர்கள் குண்டுகளைப் புதைத்து வைத்து சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினரின் காரைச் சேதப்படுத்துவார்கள் என்பது நம்பத்தக்கதாக இல்லையே”, என்று மலேசியாகினியிடம் மாவூஸ் கூறினார்.

குண்டுகள் “அன்வார் விடுதலை இயக்கத்துனர்” வைத்தவை என்று போலீஸ் வட்டாரங்களை மேற்கோள்காட்டி, உத்துசான் மலேசியா  வெளியிட்டிருக்கும் செய்தி தொடர்பில் மாவூஸ் இவ்வாறு கருத்துரைத்தார்.

அன்வார் இப்ராகிமைக் குதப்புணர்ச்சி குற்றச்சாட்டிலிருந்து உயர் நீதிமன்றம் விடுவித்த பின்னர் ஜாலான் டூத்தாவில் நீதிமன்ற வளாகத்துக்கு அருகில் நிகழ்ந்த மூன்று வெடிப்புச் சம்பவங்களில் ஐவர் காயமடைந்தனர்.

TAGS: