யார் அந்தக் குண்டுகளை வைத்தார்கள்? வழக்கமாக யார் மீது சந்தேகம் வரும்?

“தாங்கள் பேரணி நடத்தும் இடத்துக்கு 901 ஆதரவாளர்கள் ஏன் குண்டுகளை வைக்க வேண்டும்? அப்படிச் செய்வது சொந்த வீட்டுக்குள் குண்டுகளை கொண்டு வருவதற்கு இணையாகும்.”

“குண்டுகள் 901 பேரணி ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பிணைக்கப்படுகின்றன”

விக்டர் ஜோஹான்: அந்த “அதிகம் நம்ப முடியாத” வட்டாரம் உத்துசான் மலேசியாவிடம் இவ்வாறு கூறியது: ” அந்தப் பகுதியில் கேமிராக்கள் பொருத்தப்படாததால் புலனாய்வு செய்வதற்கு சிறிது காலம் பிடித்தது.”

பேரணிக்கு ஒரு நாள் முன்னதாக ஐஜிபி என்ற தேசிய போலீஸ் படைத் தலைவர் இவ்வாறு கூறியிருந்தார்: “நீதிமன்றப் பகுதியில் கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவை பேரணி பங்கேற்பாளர்களைக் கண்காணிக்கும்.”

ஆகவே புலனாய்வுக் குழுவில் இருப்பதாக நம்பப்படும் அந்த “வட்டாரத்தை” அழைத்து ஐஜிபி விசாரிக்க வேண்டும். அத்துடன் அந்தப் புலனாய்வு தொடர்பான அண்மைய நிலவரங்களையும் வெளியிட வேண்டும்.

பத்திரிக்கையாளர்களாகவும் படப்பிடிப்ளர்களாகவும் வேடமணிந்திருந்த சிறப்புப் போலீஸ் பிரிவு ஊழியர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அன்வார் இப்ராஹிமும் அவரது குடும்பமும் பக்காத்தான் ராக்யாட் தலைவர்களும் முக்கிய நுழைவாயிலிலிருந்து வெளியே வந்த போது அவர்கள் கூட்டத்திரைத் தள்ளுவதை காண முடிந்தது.

அவர்களைக் காண வேண்டுமானால் இணையத்தில் சேர்க்கப்பட்டுள்ள வீடியோக்களைப் பாருங்கள்.

குண்டுகளை வைப்பது போன்ற குறும்புத்தனமான நடவடிக்கைகளில் இறங்கியிருக்கக் கூடிய அன்வார் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை அவர்கள் பிடித்திருக்கலாமே?

எச்ஒய்எல்: “அந்தப் பகுதி முழுமையாக சோதனை செய்யப்பட்டுள்ளதுடன் பேரணிக்கு ஒரு நாள் முன்பு தொடக்கம் அங்கு காவல் பணிகளை போலீஸ்காரர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.”

ஒரு நாள் முன்னதாகவே போலீஸ்காரர்கள் அங்கு இருந்ததால் அவர்களே ஏன் குண்டுகளை வைத்திருக்கக் கூடாது என என் மனதுக்குப் பட்டது. போலீஸ் கூர் உருளையில் அதனைப் பயன்படுத்துகின்றவர்கள் தவிர  வேறு யார் குண்டை வைத்திருக்க முடியும்?

இடைத் தேர்தல் விசிறி: ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களுக்கே வெடி வைத்துக் கொண்டார்களா? வினோதமாக இருக்கிறது. அன்றைய தினம் நீதிமன்ற வளாகத்தில் எத்தனை போலீஸ்காரர்கள் நிறுத்தப்பட்டனர்? பக்காத்தான் ஆதரவாளர்களுடன் போலீஸ் அதிகாரிகள் மாறுவேடத்தில் இணைந்து காணப்பட்டதை என்னவென்று சொல்வது?

கேமிராக்கள் என்னவாயின? கண்ணுக்குத் தெரியாமல் கொண்டு வருவதற்கு அந்த மூன்று கூர் உருளைகள் சிறிய பொருள் அல்ல. நீதிமன்ற வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமிராக்கள் கண்காணிப்பிலிருந்து அவை எப்படித் தப்பித்தன?

அன்வார் குதப்புணர்ச்சி குற்றச்சாட்டில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்படுவார் என நம்பிய சில தரப்புக்கள் அந்தக் குண்டுகளை வைத்திருக்க வேண்டும் என்றே நான் நம்புகிறேன்.

குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதும் பெருங்குழப்பம் மூளும் என அவர்கள் எதிர்பார்த்தனர். அந்த வேளையில் வெடிப்புச் சம்பவங்களுக்கு அன்வார் ஆதரவாளர்களே காரணம் என எளிதாக பழி போட்டு விடலாம் என அந்தப் பயங்கரவாதிகள் நினைத்தனர். என்ன நான் சொல்வது 100 விழுக்காடு நியாயம்தானே?

துரதிர்ஷ்டவசமாக அன்வார் சுதந்திர மனிதராக வெளியில் வருகிறார் என அவர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.

நிக் வி: அரசியல் பிணைப்பு எப்படி இருந்தாலும் மக்களைக் குறியாகக் கொண்டு நடத்தப்பட்டுள்ள அந்தச் சம்பவங்களை எந்த ஒர் அரசாங்கத்தின் உயர் தலைவர்களும் போலீஸ் தலைவரும் கடுமையாக கண்டித்திருக்க வேண்டும்.

ஆனால் பிரதமர் நஜிப் ரசாக், துணைப் பிரதமர் முஹைடின் யாசின், உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன், ஐஜிபி, சட்டத்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் ஆகியோர் எதுவும் சொன்னதாகத் தெரியவில்லை. அதனால் அவர்கள் ஏன் மௌனமாக இருக்கின்றனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மலேசிய மக்கள்: சபாவில் எதிர்க்கட்சிகள் ஆட்சியைப் பிடித்த போது அம்னோ இதே தந்திரத்தைப் பயன்படுத்தியது என் நினைவுக்கு வருகிறது.

கேபி: அந்தப் போலீஸ் “வட்டாரம்” உத்துசானுடைய கற்பனையாகக் கூட இருக்கலாம்.

லிம் சொங் லியோங்: தாங்கள் பேரணி நடத்தும் இடத்துக்கு 901 ஆதரவாளர்கள் ஏன் குண்டுகளை வைக்க வேண்டும்? அப்படிச் செய்வது சொந்த வீட்டுக்குள் குண்டுகளை கொண்டு வந்து விட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருப்பதற்கு இணையாகும்.

ஆனால் மே 13 போன்ற கலவரம் ஏற்படுமானால் நன்மை அடைவது அம்னோவாக இருக்கும் போது அந்தக் குண்டு வெடிப்புச் சம்பவங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்த விரும்பிய பக்காத்தானும் அதன் ஆதரவாளர்களுமே காரணம் என உத்துசான் வழக்கம் போல சொல்கிறது.

TAGS: