ஏப்ரல் 20 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக மாநிலக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
நாட்டைப் பாதித்துள்ள வெப்ப அலையின் போது, குறிப்பாக தீபகற்பத்தின் வட மாநிலங்களில் வெப்பநிலை 37° முதல் 38° வரை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
வெப்பமான மற்றும் வறண்ட வானிலை காரணமாக திரங்கானுவில் உள்ள அனைத்து பள்ளிகளும் வெளிப்புற நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
திரங்கானு கல்வி இயக்குனர் கம்ச @ கமல் முகமது கூறுகையில், மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஏப்ரல் 20 முதல் நடைமுறைக்கு வந்தது என்றார்.
“நீர் சார்ந்த நடவடிக்கைகள் உட்பட அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், உட்புற நடவடிக்கைகள் அனுமதிக்கப்படுகின்றன,” என்று அவர் கூறினார்.
“1 மாணவர் 1 விளையாட்டுத் திட்டம், சீருடைப் பிரிவுகள், கிளப்புகள் மற்றும் சங்கங்கள், அத்துடன் விளையாட்டுப் போட்டிகள் போன்ற பிற நடவடிக்கைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
“மாணவர்களின் நலனில் சமரசம் செய்ய முடியாது என்பதால், பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது”.
“காலை நேரங்களில் மட்டுமே கூட்டங்கள் மற்றும் அது போன்ற நிகழ்வுகளுக்கு அனுமதி உண்டு. மதிய வேளையில் திட்டமிடப்பட்ட எந்தவொரு நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட வேண்டும்.”
கல்வி அமைச்சு வெளியிடும் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப, அடுத்தகட்ட அறிவுறுத்தல்கள் அவ்வப்போது அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.
நாட்டில் தற்போது நிலவி வரும் வெப்ப அலை காரணமாக, குறிப்பாக தீபகற்பத்தின் வடக்கு மாநிலங்களில் வெப்பநிலை 37° முதல் 38° வரை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது..
























