நஜிப் சுமூகமான ஆட்சி மாற்றத்துக்கு உத்தரவாதம் அளிப்பாரா?

“மக்கள் சக்தியை எத்தகைய மருட்டலும் தோற்கடிக்க முடியாது. பிஎன் நியாயமானதை சரியானதைச் செய்வதற்கு விவேகமான உணர்வுகளும் உள்ளமும் இருப்பது நல்லது.”

புத்ராஜெயாவுக்கான பக்காத்தான் பாதையில் பல தடைகள்

கேஎஸ்என்: சுமூகமான அதிகார மாற்றம் குறித்து டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் முதலில் பேசினார். அதற்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடமிருந்து எந்த மறு மொழியும் இல்லை.

அரச சிலாங்கூர் கிளப் விருந்தில் அந்தக் கேள்வி நஜிப்-பிடம் மீண்டும் எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளிக்க நஜிப் மறுத்து விட்டார்.

ஏன் அந்தக் கேள்வி எழுப்பப்பட்டது என்று எனக்குள் சிறிது குழப்பமாக இருந்தது. கூட்டரசு நிலையில் எதிர்த்தரப்பு பெரும்பான்மை இடங்களைப் பிடிக்கும் என்ற எண்ணத்துடன் அந்த சூழ்நிலையில் அம்னோ/பிஎன் அதிகாரத்தைப் பிடித்துக் கொண்டிருக்குமா என்ற உள் அர்த்தம் அந்தக் கேள்விக்குள் அடங்கியுள்ளது.

இராணுவம், போலீஸ் போன்ற அமைப்புக்களைப் பயன்படுத்தி அல்லது தவறாகப் பயன்படுத்தி சட்ட  விரோதமான, ஜனநாயகத்துக்குப் புறம்பான வழிகளில் நஜிப் அதிகாரத்தை பிடித்துக் கொண்டிருக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. அப்படி என்றால் தேர்தலை ஏன் நடத்த வேண்டும்?

விசுவாசமான மலேசியன்: அரசாங்க மாற்றத்துக்கு மக்கள் வழங்கும் ஆணையை அம்னோ புத்ராக்கள் மதிப்பார்களா என்னும் அர்த்தத்தைக் கொண்ட அனுமான அடிப்படையில் கேட்கப்பட்ட அந்தக் கேள்விக்குக் கூட பதில் அளிக்கும் துணிச்சல் நஜிப்-பிடம் இல்லை. உண்மையில் அச்சத்தைத் தருகிறது.

சாடிரா: தேர்தலில் வெற்றி பெறுகின்ற கட்சி ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதே ஜனநாயகமாகும். அந்த உரிமையை பிஎன் மறுக்குமானால் அது அதற்கு பெரிய கரும் புள்ளியாகி விடும். ஜனநாயகத்தை அது மதிக்கவில்லை என்பதும் தெரிந்து விடும்.

புத்ராஜெயாவில் யார் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியது பிஎன் அல்ல. அது மக்கள் தேர்வாக இருக்க வேண்டும். மக்கள் விருப்பத்தை அது மதிக்கா விட்டால் மக்கள் எழுச்சி பெறுவர். மலேசிய எழுச்சியை உலகம் காணும்.

மக்கள் சக்தியை எத்தகைய மருட்டலும் தோற்கடிக்க முடியாது. அதுவும் தேர்தல் முடிவுகள் தெளிவாக இருக்கும் போது. பிஎன் நியாயமானதை சரியானதைச் செய்வதற்கு விவேகமான உணர்வுகளும் உள்ளமும் இருப்பது நல்லது.

உண்மையில் பிரதமர் அந்தக் கேள்விக்குப் பதில் அளிக்காதது அவருடைய நம்பகத்தன்மைக்கு ஏற்பட்டுள்ள களங்கமாகும். 50 ஆண்டு கால முறைகேடான ஆட்சி போதாதா?

அடையாளம் இல்லாதவன்_3f55: நஜிப் ஒரு கோழை என்பது இப்போது நமக்குத் தெரிந்து விட்டது. மலாய் பழமொழி ஒன்று கூறுவது போல “கல்லை எறிந்து விட்டு கையை மறைத்துக் கொள்வது”தான் அது.

2010ம் ஆண்டு அவர் நிகழ்த்திய அம்னோ உரை வெறும் ‘நாடகம்’. அந்த உரை தொடர்பான சாதாரணக் கேள்விக்குக் கூட பதில் அளிக்க அவர் மறுக்கிறார். மக்கள் அந்தக் கேள்வியை அவருடன் கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்புக் கிடைக்கும் ஒவ்வொரு முறையும் எழுப்ப வேண்டும் என நான் நினைக்கிறேன்.

அவரைத் தொடர்ந்து இக்கட்டான சூழ்நிலையில் வையுங்கள். அப்போது தான் அவருடைய உண்மையான நிறம் வெளியாகும். எல்லாம் சரியாக இருக்கிறது என்னும் தோற்றத்தை உருவாக்குவதில் அவர் வல்லவர். ஆனால் இறுதியில் அதில் ஒன்றுமே இருக்காது.

SARA 1Malaysia, BR1M, KR1M போன்று எல்லாமே கண் துடைப்புக்கள். அவர் ஒரு வேளை மலேசியாவை ‘Malays1a’ என்று கூட மறுபெயரிடலாம்.

பெர்ட் தான்: 2010ம் ஆண்டுக்கான அம்னோ பொதுப் பேரவையைத் தொடக்கி வைத்த பிரதமர் இவ்வாறு கூறினார்: ” நமது சடலங்கள் நசுக்கப்பட்டாலும் நமது உயிர்கள் இழக்கப்பட்டாலும் சகோதரர்களே, சகோதரிகளே, என்ன நடந்தாலும் நாம் புத்ராஜெயாவைத் தற்காக்க வேண்டும்.”

நேரடியாக எழுப்பப்பட்ட அந்தக் கேள்விக்குப் பதில் அளிக்க மறுத்திருப்பது, அடுத்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் வெற்றி பெற்றால் எதிர்த்தரப்பிடம் அரசாங்கம் சுமூகமாக மாறுவதை பிரதமர் என்ற முறையில் உறுதி செய்வாரா? அல்லது அவர் அம்னோ பொதுப் பேரவையில் தாம் சொன்னதில் உறுதியாக இருப்பாரா?

எதிர்க்கட்சிகள் அதிகாரத்தைப் பிடிக்குமானால் விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதும் நிகழுமானால் அதற்கு யார் பொறுப்பு என்பது நமக்கு நன்கு தெரியும். பாசத்துக்குரிய நமது நாட்டில் அது நிகழ மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

TAGS: