கினபாலு மலையிலிருந்து மீட்கப்பட்ட குரோஷிய மலையேற்ற வீரர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம்

அனுமதியின்றி மலையேறியது மற்றும் அங்கீகரிக்கப்படாத பாதையைப் பயன்படுத்தியது தொடர்பாக, மௌரோ பெர்சிக் (Mauro Persic) மீது சபா பூங்காக்கள் (Sabah Parks) காவல்துறை புகார் அளித்துள்ளது.

சபா பூங்காக்களின் (Sabah Parks) இயக்குனர் மக்லரின் லாகிம் (Maklarin Lakim) கூறுகையில், மௌரோ பெர்சிக் (Mauro Persic) மலையேறுவதற்கான அனுமதியை வைத்திருக்கவில்லை என்றும், அவர் அதிகாரப்பூர்வ பாதையைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக ஒரு கிராமப் பாதையைப் பயன்படுத்தியதாகவும் முன்னர் தெரிவித்துள்ளார்.

மலேசியாவின் சபா மாநிலத்தில் உள்ள மவுண்ட் கினபாலுவில் (Mount Kinabalu) ஏறும் போது தவறி விழுந்து மீட்கப்பட்ட குரோஷிய நாட்டவர், அதிகாரப்பூர்வமற்ற பாதையைப் பயன்படுத்தியதற்கும், ஏறும் அனுமதிப் பத்திரம் (permit) இல்லாமல் மலையேற்றம் செய்ததற்கும் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடலாம்.

சபா மாநில சுற்றுலா, கலாசாரம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜாஃப்ரி அரிஃபின் கூறுகையில், சம்பவம் தொடர்பாக சபா பார்க்ஸ் (Sabah Parks) காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகத் தெரிவித்தார். 46 வயதான Mauro Persic(மௌரோ பெர்சிக்) தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

“காவல்துறையும் சபா பார்க்ஸும் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து விசாரித்து வருகின்றன. அவர் குணமடைந்த பின்னர் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்போம்,” என்று அவர் இன்று கோத்தா கினபாலுவில் கூறியதாக பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிகாரிகளின் விசாரணையின் முடிவைப் பொறுத்து, அந்த மலையேற்ற வீரருக்கு அபராதம் விதிக்கப்படலாம் என்றும் ஜாஃப்ரி தெரிவித்தார்.

டெய்லி எக்ஸ்பிரஸ் செய்தியின்படி, செப்டம்பர் 6ஆம் தேதி மவுண்ட் கினபாலுவில் ஏறிக்கொண்டிருந்தபோது பெர்சிக்(Persic) காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. அடுத்த நாள் அவர் பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கப்பட்டார். பின்னர் 43 பேர் கொண்ட மீட்புக் குழுவினர் செப்டம்பர் 11ஆம் தேதி அவரை மலையிலிருந்து வெற்றிகரமாக கீழே அழைத்து வந்தனர்.

அவரது வலது காலிலும் விலா எலும்புகளிலும் காயங்கள் ஏற்பட்டதுடன், கைகளில் சிறிய காயங்களும் ஏற்பட்டிருந்தன. முதலில் திம்போஹோன் கேட்(Timpohon Gate) பகுதியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ரானாவ்(Ranau) மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதற்கு முன்னதாக, சபா பார்க்ஸ் இயக்குநர் மக்லரின் லக்கிம்(Maklarin Lakim) கூறுகையில், பெர்சிக்(Persic)-க்கு மலையேற்ற அனுமதிப் பத்திரம் இல்லை என்றும், அதிகாரப்பூர்வமான பாதைக்குப் பதிலாக ஒரு கிராமப் பாதையைப் பயன்படுத்தி மலையேறியதாகவும் தெரிவித்திருந்தார்.