KL-ல் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கித் தவித்த கார்களில் இருந்து 3 பேர் மீட்கப்பட்டனர்.

தீயணைப்பு வீரர்கள் வெள்ளத்தில் மூழ்கிய ஒரு வீட்டிற்கும் சென்றனர். அங்கு இருந்தவர்கள், தண்ணீரில் மின்சாரம் பாய்ந்திருக்கலாம் என்று அஞ்சினர்.

இன்று மாலை கோலாலம்பூர் மற்றும் அம்பாங் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்திற்குப் பிறகு, காயங்கள் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

மாலை நேரத்தில் கோலாலம்பூர் மற்றும் அம்பாங் பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து, இரண்டு கார்களில் சிக்கியிருந்த மூன்று பேர் மீட்கப்பட்டனர்.

அம்பாங், ஜாலான் மெங்குடுவில் உள்ள ‘டஸ்கனி ஹோம் ஃபர்னிச்சர்ஸ்’ (Tuscany Home Furnitures) அருகே சுமார் ஒரு மீட்டர் ஆழமுள்ள வெள்ள நீரில் ஒரு காரில் ஒருவர் சிக்கியதாகவும், கோலாலம்பூர், தாமான் யு-தாண்டில் உள்ள ‘டெசா அங்கசா’ (Desa Angkasa) காண்டோமினியம் அருகே சுமார் 60 செ.மீ ஆழமுள்ள வெள்ளத்தில் ஒரு பி.எம்.டபிள்யூ (BMW) காரில் இருவர் சிக்கியதாகவும் கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் மேலும், அம்பாங், Ukay Perdana Heights(உகாய் பெர்டானா ஹைட்ஸ்) பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு வீட்டிற்கும் சென்றனர். வெள்ளநீரில் மின்சாரக் கசிவு இருக்கக்கூடும் என அங்கு வசித்தவர்கள் அச்சம் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவங்களில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.