ஈப்போவில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 வெளிநாட்டு மாணவர்கள் கைது

செப்டம்பர் 18 அன்று பாதிக்கப்பட்ட நபர் முகத்தில் காயங்களுடன் மயக்க நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொதுமக்களில் சிலர் காவல்துறையிடம் புகார் அளித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் 17 முதல் 20 வயதுடையவர்கள் என்றும், அவர்கள் தங்களது வீடுகளில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் ஈப்போ காவல்துறைத் தலைவர் நஜீப் ஹம்சா தெரிவித்தார்.

மலேசியாவின் பேராக் மாநிலம், ஈப்போவில் உள்ள கம்போங் குச்சாய் பகுதியில் செப்டம்பர் 18ஆம் தேதி 53 வயது ஆடவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக மூன்று வெளிநாட்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈப்போ காவல்துறைத் தலைவர் நஜிப் ஹம்சா தெரிவித்ததன்படி, 17 முதல் 20 வயதுக்குட்பட்ட தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் மூவரும் இன்று ஈப்போவில் உள்ள அவர்களது வீடுகளில் வைத்து கைது செய்யப்பட்டனர் என்று உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது.

கம்போங் குச்சாய் பகுதியில் பொதுமக்கள், முகத்தில் காயங்களுடன் அந்த ஆடவர் மயக்க நிலையில் கிடந்ததை செப்டம்பர் 18ஆம் தேதி கண்டுபிடித்து காவல்துறையில் புகார் அளித்தனர்.

அவர் ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, மூன்று நாட்கள் சிகிச்சை பெற்ற நிலையில், நேற்று மாலை உயிரிழந்தார்.

உடற்கூராய்வில், தலையில் ஏற்பட்ட பலத்த தாக்குதலால் ஏற்பட்ட காயமே மரணத்திற்குக் காரணம் என தெரியவந்ததாக நஜிப் தெரிவித்தார்.

இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302-ன் கீழ் கொலை வழக்காக விசாரிக்கப்பட்டு வருகிறது.