இந்த விலைகள் செப்டம்பர் 30 வரை மட்டுமே செல்லுபடியாகும்.
நாளை முதல் RON97 பெட்ரோல், மானியமில்லா RON95 மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் ஒட்டுமொத்தமாக உயரும் என்று நிதியமைச்சு இன்று அறிவித்துள்ளது.
RON97 மற்றும் மானியமில்லா RON95 ஆகியவற்றின் விலைகள் லிட்டருக்கு 20 சென் உயர்ந்து முறையே ரிம 5.05 மற்றும் ரிம 4.57 ஆக விற்பனையாகும்.
அதேவேளையில், மானியமில்லா டீசலின் விலை 15 சென் உயர்ந்து லிட்டருக்கு ரிம 5.42 ஆக விற்பனை செய்யப்படும்.
BUDI95 திட்டத்தின் கீழ் மானியம் பெற்ற RON95 பெட்ரோல் தொடர்ந்து லிட்டருக்கு ரிம 1.99 என்ற விலையிலும், BUDI Diesel திட்டத்தின் கீழ் டீசல் லிட்டருக்கு ரிம 2.10 என்ற விலையிலும் விற்பனை செய்யப்படும்.
மானியம்பெற்ற பெட்ரோல் கட்டுப்பாட்டு அமைப்பின் (SKPS) கீழ் மானியம் பெற்ற பெட்ரோல் லிட்டருக்கு ரிம 2.05 என்ற விலையிலும், மானியம்பெற்ற டீசல் கட்டுப்பாட்டு அமைப்பின் (SKDS) கீழ் மானியம் பெற்ற டீசல் லிட்டருக்கு ரிம 2.15 என்ற விலையிலும் மாற்றம் இன்றி தொடரும்.
இந்த விலைகள் செப்டம்பர் 30 வரை அமலில் இருக்கும்.
தகுதிபெற்ற நுகர்வோருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட ‘புடி மடானி’ (BUDI Madani) மானியங்களைத் தொடர்ந்து வழங்குவது உட்பட, உலகளாவிய நிச்சயமற்ற தன்மையின் தாக்கத்திலிருந்து பொதுமக்களையும் வணிகங்களையும் புத்ராஜெயா தொடர்ந்து பாதுகாக்கும் என்று நிதியமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
























