’300,000 ரிங்கிட் பெற்றதாக கூறப்படும்’ முன்னாள் அமைச்சரை MACC விசாரித்தது

முன்னாள் அமைச்சர் ஒருவர் நன்கொடைகளாக 300,000 ரிங்கிட்டை பெற்றதாகக் கூறப்படுவது தொடர்பில் அவரை எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் நேற்று விசாரித்துள்ளது.

இப்போது ஒர் எம்பி-யாக இருக்கும் அந்த முன்னாள் அமைச்சர் கடந்த ஆண்டு ஒரு நிறுவனத்திடமிருந்து அந்தத் தொகையைப் பெற்றதாக கூறப்பட்டுகிறது.

அந்த முன்னாள் அமைச்சர் பல மணி நேரம் எம்ஏசிசி அலுவலகத்தில் இருந்ததாக சில வட்டாரங்களை மேற்கோள் காட்டி நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

வளைவான பாலத் திட்டத்துக்கான குத்தகையாளரிடமிருந்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 7ம் தேதி அந்த முன்னாள் அமைச்சர் அந்தப் பணத்தை பெற்றுக் கொண்டதாக வலைப்பதிவு ஒன்றில் வெளியான தகவலையும் அந்த ஏடு மேற்கோள் காட்டியது.

அந்த நன்கொடைக்கான நோக்கம் குறித்தும் அதன் உண்மையான தன்மை குறித்தும் அந்த வலைப்பதிவாளர் கேள்வி எழுப்பியிருந்தார்.

எம்ஏசிசி அதனை விசாரிக்க வேண்டும் என்றும் வலைப்பதிவாளர் வலியுறுத்தியிருந்தார்.

TAGS: