வெள்ளை மாளிகைக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் புகைக் குண்டு வீச்சு!

அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்குள் நேற்று தீடிரென புகை கிளம்பியதால் வெள்ளை மாளிகை மூடப்பட்டது. வெள்ளை மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடத்தி வருபவர்கள் புகைக் குண்டு வீசியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறுகையில், வெள்ளை மாளிகை தற்போது பூட்டப்பட்டுள்ளது. மாளிகை வளாகத்தில் புகை தொடர்பான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் மாளிகை பூட்டப்பட்டுள்ளது என கூறினார்.

வெள்ளை மாளிகை முன்பு போராட்டம் நடத்தி வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்த புகை குண்ட‌ை வீசியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது பற்றி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். புகை குண்டை தொடர்ந்து சம்பவ இடத்தை பாதுகாப்பு அதிகாரிகள் சுற்றி ‌வளைத்துள்ளனர்.

வளாகத்தில் உள்ள புகை பொருளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சம்பவ இடத்திலிருந்து போராட்டக்காரர்கள் வெளியேறி வருகின்றனர். இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை என வெள்ளை மாளிகை இரகசியப் பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.