அன்வார் இப்ராகிம், தாம் ஓரினப்புணர்ச்சியைச் சட்டப்பூர்வமாக்க விரும்புவதாக அம்னோவுக்கு சொந்தமான உத்துசான் மலேசியா “பொய்க்கதைகள் கட்டிவருவதாக”க் கூறி, அச்செய்தித்தாளுக்கு எதிராக ரிம150மில்லியன் அவதூறு வழக்கைப் பதிவு செய்துள்ளார்.
இன்று வழக்கைப் பதிவுசெய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்வாரின் வழக்குரைஞரும் பிகேஆர் உதவித் தலைவருமான என்.சுரேந்திரன்,“இந்தக் குற்றச்சாட்டு உலக அளவில் பரவி அதனால் அரசதந்திரியான அன்வாரின் தோற்றம் பாதிக்கப்பட்டுள்ளது.அதனால்தான் இவ்வளவு பெரிய இழப்பீட்டுத் தொகையைக் கோருகிறோம்”, என்று கூறினார்.