குதப்புணர்ச்சி முறையீட்டுக்கு யார் பணம் கொடுக்கப் போகிறார்கள்: சைபுலா அல்லது வரி செலுத்துவோரா?

“குற்றச்சாட்டு,  இணக்கமான செக்ஸ், ஆகவே சைபுல் விருப்பமுள்ள கூட்டாளி. இந்த முறையீடு அவருடைய கௌரவத்தையும் நேர்மையையும் எப்படிக் காப்பாற்றப் போகிறது?”

குதப்புணர்ச்சி தீர்ப்புக்கு எதிராக ஏஜி முறையீட்டை சமர்பித்தார்

மூன் டைம்: இது போதும், போதும் என்ற அளவுக்கு நீண்டு விட்டது. வெட்கத்தைக் கொண்டு வந்ததற்காகவும் ஏமற்றியதற்காகவும் நீதிமன்றங்களின் நேரத்தை அப்பட்டமாக விரயமாக்கியதற்காகவும் சட்டத்தைப் பின்பற்றும் அனைத்து மலேசியர்களும் சைபுல் மீதும் அவர் குடும்பத்தினர் மீதும் வழக்குப் போட வேண்டும்.

நமக்கு வழக்கு போடுவதற்கு சட்டப்பூர்வமான அதிகாரம் இல்லை என்றாலும் இந்த முறையீட்டுக்காக எவ்வளவு வளங்கள் வீணாகப் போகின்றன என்பதை நாம் அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

அன்வார் இப்ராஹிம் பிரதமராவதைத் தடுப்பதற்கான அரசியல் சதி இதுவென கூறப்படுவதை உறுதி செய்ததின் மூலம் சட்டத்துறைத் தலைவர் தமது உண்மையான நிறத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பக்காத்தான் ராக்யாட் ஆட்சிக்கு வந்து கூட்டரசு அரசாங்கத்தை அமைத்தால் தங்கள் ஊழல் வாழ்க்கை முறை அம்பலத்துக்கு வந்து விடும் என ஆட்சியாளர்கள் அஞ்சுகின்றனர்.

குழப்பம் இல்லாதவன்:  நானும் நல்ல சிந்தனையைக் கொண்ட மலேசியர்களும்- சைபுல் என்ன நீதியை எதிர்பார்க்கிறார் என வினவுகின்றோம்.

குற்றச்சாட்டு,  இணக்கமான செக்ஸ், ஆகவே சைபுல் விருப்பமுள்ள கூட்டாளி. அதனை சைபுலே உறுதி செய்துள்ளார். இந்த முறையீடு அவருடைய கௌரவத்தையும் நேர்மையையும் எப்படிக் காப்பாற்றப் போகிறது?

முறையீட்டில் அன்வார் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால் தமது எஜமானருடன் இணக்கமான செக்ஸ் என்ற சைபுலின் நிலை மாறவா போகிறது?

இந்த முறையீடு அவருடைய கௌரவத்தையும் நேர்மையையும் எப்படிக் காப்பாற்றப் போகிறது?
யாராவது எனக்கு அதனை விளக்க வேண்டும்.

டேசிகான்: அந்த விவகாரத்தை தொடருவதற்கு சைபுல் தமது சொந்த வழக்குரைஞரை அமர்த்தி பணத்தை செலவு செய்ய வேண்டும். அந்த தனிப்பட்ட வழக்கில் அரசாங்கம் ஏன் சம்பந்தப்பட வேண்டும்?

கியூ !: இதற்கு யார் பணம் கொடுக்கிறார்கள்? சைபுலா வரி செலுத்துகின்றவர்களா? அவருக்கு என்ன நேர்ந்தது என்பது பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும். அதற்கு பணம் கொடுக்குமாறு அவர் தமது தந்தையாரைக் கேட்டுக் கொள்ளலாமே?

அப்டூயூ: முறையீடு எதிர்பார்க்கப்பட்டதுதான். முதல் சுற்றில் அன்வார் வெற்றி அடைந்தார். இரண்டாம் சுற்று அன்வாருக்கு எதிராக இருக்கும். முன்றாம் சுற்று நிகழும் போது அந்த வழக்கு பொருத்தமற்றதாகி விடும்.

டாக்டர்: எல்லாம் அரசியல் நாடகம். நன்கு திட்டமிடப்பட்டு சரியான நேரத்தில் அமலாக்கப்படுகிறது. அன்வாரை நீதிமன்ற வாசல்களிலேயே கட்டுப்படுத்தி வைப்பது அதன் நோக்கம். அப்போது தேர்தல் நடைபெறும். அன்வார் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு ஜெயிலுக்கு அனுப்பப்படுவார்.

இறந்த மாது ஒருவர் நீதி கோரி மன்றாடுவது பற்றி ஏஜி கவலைப்படவே இல்லை. அந்த மாதுக்கு மலேசியாவில் தெரிந்த ஒரே மனிதராக அப்துல் ரசாக் பகிந்தா இருந்த போதிலும் அவர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக அவர் முறையீடு செய்யவே இல்லை. மலேசியாவில் நீதிக்கு இது சோகமான நாள்.

பேஸ்: நல்ல வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் அந்த நாடகம் மலேசியாகினி வாசகர்களுக்கு அல்ல.

உத்துசான் மலேசியா, பெரித்தா ஹரியான், தி ஸ்டார், நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ், ஆர்டிஎம், டிவி3 ஆகியவை சொல்வதையே கிராமப் புற மக்கள் நம்புகின்றனர்.

அம்னோ/பிஎன் இன்னும் ஒட்டுநர் இருக்கையில்தான் அமர்ந்துள்ளது. கிராமப் புற மக்கள் உண்மையை அறிந்தால் மட்டுமே நிலைமை மாறும்.

செனட்டர்: நாடகக் காட்சிகள் தொடர்ந்து அரங்கேறட்டும். உலகம் கவனித்துக் கொண்டிருக்கிறது. மலேசியா உலகிற்கு வேறு எதனைத் தர முடியும்?

TAGS: