வாக்காளர் பதிவு: ஒரே ஒரு புள்ளிவிவரக் களஞ்சியம் மட்டும் இருக்கட்டும்

“அடுத்தடுத்து காரணங்கள் சொல்லப்படுகின்றன. இது எப்போது நிற்கும்? அதற்கான தீர்வு மிக எளிது. ஆனால் அது ஏன் அமலாக்கப்படவில்லை என்பது எனக்கு வியப்பைத் தரவில்லை.”

 

 

 

 

வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரைக் கண்டு பதிவு செய்யாதவர்கள் அதிர்ச்சி

கோமாளி: இசி என்ற தேர்தல் ஆணையம் இப்போது வாக்காளர் பதிவதிகாரிகள் மீது பழி போடுகிறது. வாக்காளராகப் பதிவு செய்யாதவர்களுடைய பெயர்கள் இப்போது பட்டியலில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அது எப்படி வாக்காளர் பதிவதிகாரியின் தவறாக இருக்க முடியும்?

தனிநபர்களுடைய விவரங்கள் அவர்களுக்கு எப்படிக் கிடைக்கும்? யாரும் தாங்களாகவே முன் வந்து சொந்த புள்ளி விவரங்களைக் கொடுப்பது இல்லை. தேர்தல் ஆணையத்துக்கும் தேசிய பதிவுத்துறைக்கும் மட்டுமே அந்தப் புள்ளிவிவரங்களை அறிந்திருக்க வாய்ப்பு உண்டு. அதனால் அவை அந்தப் பிரஜைகளை வாக்காளர்களாகப் பதிவு செய்திருக்க வேண்டும்.

எல்பாய்: அடுத்தடுத்து காரணங்கள் சொல்லப்படுகின்றன. இது எப்போது நிற்கும் அதற்கான தீர்வு மிக எளிது. ஆனால் அது ஏன் உயர்ந்த நிலையில் உள்ள அதிகாரிகள் அமலாக்கவில்லை என்பது எனக்கு வியப்பைத் தர வில்லை. ஒரே ஒரு புள்ளிவிவரக் களஞ்சியம் மட்டும் ஏன் இருக்கக் கூடாது? அதாவது தேசியப் பதிவுத்துறை.

ஒவ்வொருவரும் தமது முகவரிகளைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டியது அவசியம் என சட்டம் சொல்கிறது. தேசியப் பதிவுத் துறை புள்ளிவிவரக் களஞ்சியத்தில் உள்ள முகவரியே ஒருவர் எங்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்கு அடிப்படையாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட வயதை அடைந்ததும் இயல்பாகவே வாக்காளராகப் பதிவு செய்யப்படுவதும் அறிமுகம் செய்யப்பட வேண்டும்.

நடப்பு தேர்தல் ஆணைய நடைமுறைகள் அதிகார வர்க்கத்துக்கு சாதகமாக வரையப்பட்டுள்ளன.  காலம் காலமாக அதுதான் நடந்து வருகிறது.

அலன் கோ: தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜிஸ் யூசோப் அவர்களே, ஆவி வாக்காளர்கள், அஞ்சல் வாக்காளர்கள், அண்மையில் அம்பலமான படியாக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள் ஆகிய பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு முன்னர் நீங்கள் வெளிநாடுகளில் வேலை செய்யும்/ வாழ்கின்ற மலேசியர்களுக்கு வாக்குரிமையை அறிமுகம் செய்வது பற்றிப் பேசுகின்றீர்கள்.

ஆயுதப் படை ஊழியர்கள் அம்னோ/பிஎன்னுக்கு ஆதரவாக குறியிட அனுமதிக்கும் நடப்பு அஞ்சல் வாக்கு முறையைப் போன்று வெளிநாடுகளில் உள்ள மலேசியத் தூதரகங்கள் அந்தப் பணியை மேற்கொள்வதற்கு உதவ வேண்டும் என நீங்கள் விரும்புகின்றீர்கள்.

கைவிரல் ரேகை முறையை மறந்து விடுங்கள். அழிக்க முடியாத மையை அமலாக்குங்கள். பதிவு பெற்ற மலேசிய வாக்காளர் ஒருவர் ஒரு முறை மட்டுமே வாக்களிப்பதை அது உறுதி செய்யும்.

அப்துல் அஜிஸ்,  அம்னோ/பிஎன் செல்வாக்கிலிருந்து தேர்தல் ஆணையம் விடுபட்டிருப்பதோடு தூய்மையான சுதந்திரமான தேர்தலை உறுதி செய்ய அரசியல் சார்பு இல்லாமல் செயல்படவும் வேண்டும். அந்தப் புனிதமான பணியை நீங்கள் புரிந்து கொள்ளா விட்டால் பதவி துறப்பதின் மூலம் மலேசியர்களுக்கு நன்மை செய்யுங்கள்.

கேகன்: வெளிநாடுகளில் உள்ள மலேசியர்களை வாக்களிக்க அனுமதிப்பதில் ஏதோ உள்நோக்கம் இருக்க வேண்டும் என நான் உறுதியாக நம்புகிறேன். பிஎன்னுக்கு ஆதரவாக வாக்குகளை திரட்ட இன்னொரு வாய்ப்பு.

தேர்தல் ஆணையத்துக்கு கௌரவமான மனிதர்கள் பொறுப்பேற்காத வரையில் நான் அதனை நம்ப மாட்டேன்.

அந்த ஆணையத் தலைவரும் துணைத் தலைவரும் நீக்கப்பட்டு கட்சிச் சார்பற்றவர்கள்  பொறுப்பேற்க வேண்டும். இல்லை என்றால் அந்த ஆணையத்தை யாரும் நம்ப முடியாது.

உங்கள் அடிச்சுவட்டில்: வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்கள் வாக்களிக்க அனுமதிக்கும் தேர்தல் ஆணைய யோசனை மீது அதிக பரபரப்பு அடைய வேண்டாம். தேர்தல் ஆணையம் மீதான நம்பகத்தன்மை மீது சந்தேகம் நிலவுவதால் மோசடி செய்வதற்கு இன்னொரு வழியாகக் கூட அது இருக்கலாம்.

TAGS: