“ஆகவே, இறுதியில் எல்லாமே சிந்தனைகளைக் கட்டுப்படுத்துவதுதான். கல்வி அல்ல. முழுமையான சதித் திட்டத்தில் நீங்கள் பகடைக் காய்களே.”
மலாய் இடச்சாரிகள் உண்மையில் சுதந்தரப் போராளிகள் அல்ல
அடையாளம் இல்லாதவன்_3hdchd: வரலாறு என்பது தத்துவத்தைப் போல நிர்ணயிக்கப்பட்ட உண்மைகளைக் கொண்டது அல்ல. மாறாக அது ஒர் ஒட்டமாகும். அது பல விளக்கங்களுக்கு உட்பட்டது.
மலேசிய வரலாறு ஆர்வத்தைத் தூண்டுவதாகும். காரணம் அதில் சொல்வதற்கும் எழுதுவதற்கும் நிறைய விஷயங்கள் உள்ளன. அரசியல் நோக்கங்களுக்காக மந்தமாகி விட்ட ஒரு விஷயமான வரலாறு மீது விவாதங்களை தொடக்கி வைத்த பேராசிரியர் கூ-வுக்கு என் நன்றி.
என்றாலும் அவர் காலம் கடந்து சொல்கிறார் என நான் அஞ்சுகிறேன். அவர் உண்மையில் நிலமையைப் புரிந்து கொள்ளவில்லை.
“மக்களுக்குத் தெரியாது” என அவர் மீண்டும் மீண்டும் சொல்வதில் நான் வியப்படையவில்லை. நிச்சயம் அவர்களுக்குத் தெரியாது. காரணம் அரசியல்வாதிகள் அதனைக் கடத்தி விட்டார்கள்.
ஜேம்ஸ்1067: நல்லது. மலாய் இடச்சாரிகள் சுதந்தரப் போராளிகள் அல்ல. ஆனால் நமது சுதந்தரப் போராட்டத்துக்கு அவர்கள் ஏதாவது ஒரு வழியில் உதவியுள்ளனர்.
பல ஆண்டுகள் வரலாற்றுப் பாடங்களை நடத்தியுள்ள கூ, நமது பள்ளிக் கூடங்களில் இப்போது கற்பிக்கப்படும் வரலாற்றில் பல பிழைகள் இருப்பதாகக் கூறுவது வியப்பைத் தருகிறது.
மலேசிய வரலாற்றை நிர்வாகிகள் கட்டுப்படுத்திக் கொண்டிருந்த போது நீங்கள் எங்கே போனீர்கள்?
நன்மைகளையும் சகாயங்களையும் அனுபவிப்பதற்காக நீங்கள் அவர்களுடன் வேலை செய்வதை விரும்பினீர்கள். இல்லையென்றால் நீங்கள் வெகு காலத்துக்கு முன்பே பேசியிருப்பீர்கள்.
ஸ்விபெண்டர்: பேராசிரியர் அவர்களே, நமது நாட்டின் உண்மையான வரலாறு அல்லாத விஷயங்களைப் பற்றிப் பேசுகின்றீர்கள். நமது நாட்டின் உண்மையான வரலாறு பற்றி நீங்கள் ஏன் பேசக் கூடாது?
பயனில்லாத ஒன்றைப் பற்றிப் பேசுவதால் யாருக்கும் நன்மையில்லை. அது மலேசியர்களுடைய உள்ளங்களில் குழப்பத்தையே ஏற்படுத்தும்.
பள்ளிக்கூடங்களில் போதிக்கப்படும் வரலாற்றில் “துல்லிதம் இல்லாத பல விஷயங்கள்” அடங்கியிருப்பதாக நீங்கள் உறுதிப்படுத்தியுள்ளீர்கள்.
நமது வரலாற்றில் இப்போது நடக்கும் விஷயங்களுக்கு “நிர்வாகிகள்” தான் முக்கியக் காரணம் என நீங்கள் கூறுவதின் அர்த்தமாகும்.
நமது கல்வியாளர்கள், விரிவுரையாளர்கள் ஆகியோருடைய நிலைமையும் பரிதாபமாக உள்ளது.
நமது உண்மையான வரலாறு நிர்வாகிகளின் அரசியலுக்கு இணங்க அதற்கு ஏதுவாக திரிக்கப்பட்டுள்ளதை நாம் அனைவரும் அறிவோம். அது ஊரறிந்த ரகசியமாகும் (படிக்கவும்: அம்னோவும் மலாய் மேலாண்மை சித்தாந்தமும்).
ஆகவே இறுதியில் எல்லாமே சிந்தனைகளைக் கட்டுப்படுத்துவதுதான். கல்வி அல்ல. முழுமையான சதித் திட்டத்தில் நீங்கள் பகடைக் காய்களே.