போலீஸ் தாமதமாக நடவடிக்கை எடுத்ததற்கான காரணத்தை விளக்க வேண்டும்

வெளிநபர்கள் இடையூறு செய்வதை வீடியோ ஒளிப்பதிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன. என்றாலும் எதுவும் நடக்கவில்லை எனப் போலீஸ் கூறுகிறது.”

 

 

 

அபு (ABU) செராமாவுக்கு இடையூறு தொடர்பில் அறுவர் கைது

குழப்பம் இல்லாதவன்: அந்தச் சம்பவமும் சிலாங்கூர் போலீஸ் படைத் தலைவர் துன் ஹிஸான் துன் ஹம்சா விடுத்துள்ள அறிக்கைகளும் இந்த நாட்டின் முதுநிலை போலீஸ் அதிகாரிகள் உண்மை நிலையை அறியவில்லை என்பதையும் பொதுமக்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொள்ளவில்லை என்பதையும் தெளிவாகக் காட்டுகின்றன. அப்படி இல்லை என்றால் அவர்கள் உண்மையில் கவலைப்படவே இல்லை என அர்த்தம்.

குண்டர்களுடைய நடவடிக்கைகள் சில நிமிடங்களில் இணையம் வழியாக நச்சுக் காய்ச்சலைப் போல வெகு வேகமாகப் பரவி விடும் என்பதும் அவருக்குத் தெரியவில்லை. ஆகவே எதுவும் நடக்கவில்லை எனச் சொல்வது அப்பட்டமான முட்டாள்தனம்.

நமது வீட்டிலிருந்தவாறே பார்க்கும் வகையில் எல்லாம் தெளிவாக தெரிகின்றன. அரச மலேசிய போலீஸ் படையின் மேல் நிலை அதிகாரிகள் எவ்வளவு விரைவில் ஒய்வு பெறுகின்றனரோ அந்த அளவு நாட்டுக்கு நல்லது.

“ஆகவே இது போன்ற நிகழ்வுகளுக்கும் செராமாக்களுக்கும் ஏற்பாடு செய்கின்றவர்கள் முன் கூட்டியே போலீசுக்கு தெரியப்படுத்த வேண்டும். அப்போதுதான் போலீஸ் தயாராக இருக்க முடியும். அத்துடன் அந்த நிகழ்வுகள்  குறித்து யாருக்கும் வருத்தம் ஏற்படாமல் தவிர்க்க சொற்பொழிவுகளின் சாராம்சம் உள்ளூர் உணர்வுகளை மதிக்கும் வகையிலும் இருக்க வேண்டும்.”

இங்கு நான் ஒரு விஷயத்தை எழுப்ப விரும்புகிறேன். உள்ளூர் மக்களுடைய அங்கீகாரத்தைப் பெற முடியாத எந்த ஒரு நிகழ்வும் நடைபெற முடியாதா? அதுதான் சரியா?

முதலில் ஏற்பாட்டாளர்கள் உள்ளூர் மக்களுடைய அந்த நிகழ்வு தொடருவதற்கு போலீஸ் மகிழ்ச்சியடைய எத்தனை குடியிருப்பாளர்கள் அனுமதிக்க வேண்டும் அல்லது எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்? ஒன்று கூடுவதற்கும் பேசுவதற்கும் உள்ள சுதந்தரத்தைப் பற்றி என்ன சொல்வது?

பார்வையாளன்: கலவரத்தையும் பதற்றத்தையும் தூண்ட விரும்பும் போது அம்னோ ஒரே மாதிரி வழியைத்தான் பின்பற்றுவதாகத் தோன்றுகிறது,

அது தனது சம்பளப் பட்டியலில் சில குண்டர்களை வைத்திருக்க வேண்டும். எந்த ஒரு சம்பவத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் தொடங்குவதற்கு முன்னர் அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என போலீஸுடன் அம்னோ கும்பல் தலைவர்கள் பெரும்பாலும் விளக்குவர்.

அப்செட் 2, மாட்டுத் தலை சம்பவம், போன்ற கடந்த கால தீய நோக்கம் கொண்ட நிகழ்வுகள் அனைத்திலும் அம்னோ குண்டர்கள் குழப்பத்தை ஏற்படுத்திய பின்னரே போலீஸ் வரும் அல்லது அது அங்கு இருந்தால் குழப்பத்தை ஏற்படுத்த முதலில் அனுமதித்து விட்டு பின்னர் அவர்களை நிறுத்துவது போல பாசாங்கு செய்யும்.

இந்த குறிப்பிட்ட விஷயத்தில் குண்டர்கள் குழப்பதை ஏற்படுத்தி காயத்தை விளைவித்த பின்னரே போலீஸ் சென்றடைந்தது.

இங்கு போலீஸ் ஈடுபாடு தெளிவாகத் தெரிகிறது. காரணம் குண்டர்கள் குழப்பத்தை ஏற்படுத்தியதை வீடியோ தெளிவாகக் காட்டினாலும் அந்தக் குண்டர்களைப் பாதுகாப்பதற்காக எதுவும் நடக்கவில்லை என சிலாங்கூர் தலைமை போலீஸ் அதிகாரி துன் ஹிஸான் அப்பட்டமாக பொய் சொல்லியிருக்கிறார்.

பெர்ட் தான்: அபு (ABU) என்ற அம்னோவைத் தவிர வேறு எதுவாக இருந்தாலும் பரவாயில்லை அமைப்பு ஷா அலாமில் நடத்திய செராமாவில் கலகம் செய்தவர்களுடைய நோக்கம் இனப் பூசலைத் தூண்டி விடுவதாகும். இந்த நிகழ்வு சிறுபான்மை-இந்தியர்களுக்கு எதிரானதாகும்.

இத்தகைய அரசியல் வியூகம் பயன்படுத்தப்பட்டுள்ளது இது முதன் முறை அல்ல. ஷா அலாம் செக்சன் 23ல் இந்துக் கோவில் ஒன்று கட்டப்படுவது மீது ரத்தம் சிந்தப்படும் என முஸ்லிம் ஆர்ப்பாட்டக்காரர்கள் மருட்டிய 2009ம் ஆண்டு மாட்டுத் தலை ஆர்ப்பாட்டத்தை நினைவில் கொள்ளுங்கள்.

மொத்தம் 20 ரௌடிகள் மட்டுமே இருந்தனர். அவர்களில் சிலர் அம்னோ டி சட்டைகளை அணிந்திருந்தனர். அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்தியதோடு ஒருவருக்கு காயத்தையும் விளைவித்துள்ளனர். துண்டப்பட்ட போதிலும் அங்கு அமைதியாகக் கூடியிருந்த மலாய்காரர்கள் இந்தியர்கள் ஆகியோர் சாந்தமாக இருந்தது போற்றத்தக்கது.

அபு உறுப்பினர்கள் குறிப்பாக ஹிண்ட்ராப் உறுப்பினர்களைப் பெரிதும் பாராட்ட வேண்டும். அத்துமீறி நுழைந்தவர்களைக் குறிப்பாக யூ டியூப்பில் அடையாளம் காணப்பட்ட வன்முறையைக் கையாண்ட  பருமனான மனிதரைப் போலீஸ் உடனடியாகக் கைது செய்யவில்லை. போலீஸின் ஒத்துழைப்புடன் அம்னோ வகுத்த அரசியல் சதி இது என்பதை அது உறுதி செய்தது.

டிஞ்சி: அபு (ABU) என்ற அம்னோவைத் தவிர வேறு எதுவாக இருந்தாலும் பரவாயில்லை அமைப்பின் செராமாவை ஏன் சாதாரண மக்கள் சீர்குலைக்க வேண்டும்? அந்த வாதம் அறிவுக்கு ஒப்ப இல்லை.

அதனைச் செய்தது அம்னோ ஆதரவு அல்லது அம்னோ உறுப்பினர்களாக இருக்க வேண்டும். பல அம்னோ இளைஞர்கள் தீவிரவாதிகள். அம்னோ பெரிய சகோதரர் செய்யுமாறு சொல்லும் எதனையும் அவர்கள் செய்வர்.

என்ன விலை கொடுத்தாவது புத்ராஜெயாவைத் தற்காக்குமாறு பிரதமர் நஜிப் ரசாக் அம்னோ உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். 13 வது பொதுத் தேர்தலில் பிஎன் வீழ்ச்சி  அடைந்தால் பக்காத்தான் ராக்யாட்டும் மக்களும் புத்ராஜெயாவுக்கு செல்வதை தடுக்க இராணுவம், போலீஸ், அம்னோ இளைஞர் பிரிவு, பெர்க்காசா, சிலாட் அமைப்புக்கள் ஆகியவற்றை நஜிப் பயன்படுத்தக் கூடும்.

அன்வார் வெற்றியைக் கொண்டாட மாட்டார் என நம்புவோம். அவர் அமைதியாக இருந்து அம்னோ ஆதரவு கலகக்காரர்களுடன் மோதுவதைத் தவிர்க்க வேண்டும். பக்காத்தான் ஆட்சியைக் கைப்பற்றினால் அவசர காலத்தைப் பிரகடனம் செய்ய நஜிப்புக்கு ஏதாவது காரணம் வேண்டும்.

TAGS: