மகாதிர்: இன அடிப்படையிலான கொள்கைகளை நீக்குவது கலகத்திற்கு இட்டுச் செல்லும்

ஐம்பத்துநான்கு ஆண்டுகால சுதந்திரத்திற்குப் பிறகும் இன அடிப்படையிலான சிறப்பு நடவடிக்கையை (race-based affirmative action) விட்டு விடுவதற்கு மலேசிய இன்னும் தயாராக இல்லை என்று முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் இன்னும் கருதுகிறார்.

அவ்வாறான கொள்கை இல்லாவிட்டால் நாட்டை”பெருங்குழப்பம்”ஆட்கொள்ளும், ஏனென்றால் இனங்களுக்கிடையிலான பொருளாதார பிளவு இன்னும் அதிகமாக விரிவடைந்து விடும் என்று அவர் இன்று தமது வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

“இனவாதப் பிரச்னைகளால் அழுத்தப்படாமல் இருந்திருந்தால் மலேசியா துரிதமான வலர்ச்சி காணும் என்பதில் உண்மை இருக்கலாம்.

“ஆனால், இனங்களுக்கிடையிலான செல்வ வள பகிர்ந்தளிப்பில் மிக அகன்ற வேறுபாடு இருக்கையில், ஏழை இனத்திற்கும் பெரும் செல்வந்தர் இனத்திற்கும் இடையில் விரோதம் தோன்றச் செய்யும்”, என்றாரவர்.

அவ்வாறான விரோதம் பெரும் சமுதாய இறுக்கத்தை உருவாக்கும். அது “நிலையற்றதன்மைக்கும், பெருங்குழப்பத்திற்கும், கலகத்திற்கும் இட்டுச் செல்லும்”, என்பதோடு இறுதியில் நாட்டின் பொருளாதாரத்தில் எதிர்மாறான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.

22 ஆண்டுகளாக நாட்டின் பிரதமராக இருந்த மகாதிர், இனவாத பிரச்னைகள் இல்லாத இதர மேம்பாடடைந்து வரும் நாடுகளை விட பல்லின மலேசியா துரிதமான வளர்ச்சி அடைந்துள்ளதை உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

“மலாய் பழமொழி கூறுவது போல் ‘நீ செய்தாலும் கண்டிக்கப்படுகிறாய், செய்யாவிட்டாலும் கண்டிக்கப்படுகிறாய்’. ஆகவே, மெதுவாக முன்னேற்றம் காண்பது கலகத்தால் அழிக்கப்படுவதை விட மேலானது”, என்று அவர் மேலும் கூறினார்.

TAGS: