நாம் இழந்ததை ஓர் அந்நியர் நினைவுபடுத்த வேண்டியுள்ளது!

 “பிஎன் மூத்த அரசியல்வாதிகளுக்கு பல அம்சங்கள் பணயம் வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் தோல்வி கண்டால் அவர்கள் எல்லாவற்றையும் இழந்து விடுவார்கள். அதில் அவர்களுடைய சுதந்திரமும் அடக்கம்.”

 

 

தேர்தல் சீர்திருத்தம்: மலேசியாவின் நிலை என்ன?

நிக் வி: நமது உரிமைகளைப் பாதுகாப்பதற்கு முன் வைத்துள்ள வாதங்களுக்காக மலேசியாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் ஜான் மெல்லட்டுக்கு பல மலேசியர்கள் நன்றி கூறுகின்றனர்.

தயவு செய்து எங்கள் தற்காப்புக்காக தொடர்ந்து எழுதுங்கள். எங்களுக்கு உங்களைப் போன்ற வீரர்கள் தேவை.

பல மலேசியர்கள் மலேசியாகினியில் கருத்துக்களைத் தெரிவிப்பது இல்லை. என்றாலும் அரசியல் விவேகத்தைக் கொண்ட உங்களுடைய உண்மையான சொற்றொடர்களுக்கு நாங்கள் அனைவரும் நன்றி கூறுகிறோம்.

மக்கள் ஒருவர் மீது ஒருவர் வெறுப்புக் கொள்வதற்கு இனவாதம், சமயம் ஆகியவற்றைப் பயன்படுத்தி அதே வேளையில் தாங்களும் தங்களது எடுபிடிகளும் வளமடைவதற்கு வழி வகுத்துக் கொண்ட பிஎன் ஆட்சி பல ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் பிரச்சாரத்துக்கு பலியான இன்னும் பலரது கண்கள் திறக்கப்படும் என நாங்கள் நம்புகிறோம்.

நமது நாட்டை பிஎன் இன்னும் கொள்ளையடிப்பதற்கு அனுமதித்துக் கொண்டிருக்கும் மக்களாகிய நமக்கும் அந்தப் பழி சேர வேண்டும்.

விசுவாசமான மலேசியன்: திரு மெல்லட் அவர்களே, உங்கள் விவேகத்தையும் அனுபவத்தையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்காக மிக்க நன்றி.

தங்களுக்குச் சாதகமாக இருக்கும் ஏற்றத்தாழ்வான களத்தை அம்னோபுத்ராக்கள் எளிதில் விட்டுக் கொடுப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. அதனால் அவர்கள் மீது தேர்தல் சீர்திருத்தங்களை கட்டாயமாக திணிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பார்வையற்றவன்: அது உண்மையில் சோகமான கட்டுரை. அது நேர்மையானது. பாகுபாடு காட்டவில்லை. ஆய்வு செய்கிறது. இதில் வருத்தளிக்கும் விஷயம் என்னவெனில் அந்நியர் ஒருவர் அதனை எழுத வேண்டியுள்ளது. ஏனெனில்  தங்களது உரிமைகளுக்குப் போராட மலேசியர்கள் மிகவும் பயப்படுகின்றனர்.

13வது பொதுத் தேர்தலை நடத்த இந்தியாவை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்

அடையாளம் இல்லாதவன்_40f4: 1975ம் ஆண்டு இந்தியாவின் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அவருடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிட்டது. அதற்கு என்ன காரணம் தெரியுமா ?

பிரச்சாரத்தின் போது அவருடைய தேர்தல் ஊழியர் ஒருவர் அரசாங்க வாகனத்தைப் பயன்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டதாகும்.

நல்லது. அது இந்தியா. ஆனால் இங்கு மலேசியாவில் பற்றுள்ள முஸ்லிம்கள் எனத் தங்களை கூறிக் கொண்டு ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழும் வேடதாரிகள் செய்வது எல்லாம் ஹராமானது.

பென்காஸி: நான் இவ்வாண்டுத் தொடக்கத்தில் கேரளாவுக்கு சென்றிருந்தேன். அங்கு தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு மூன்று மாதங்கள் கொடுக்கப்படுவதை நான் அறிந்து கொண்டேன். ஆனால் தூய்மையான சுதந்திரமான தேர்தல்களை பிஎன் அனுமதிக்கும் என நீங்கள் எண்ணுகின்றீர்களா?

அவ்வாறு செய்தால் அவர்கள் பொதுத் தேர்தலில் தோல்வி காண்பர். கடந்த தேர்தல்களில் பிஎன்
ஆர்டிஎம்-மைப் பயன்படுத்தியதை பார்த்தால் ஆர்டிஎம் மக்களுக்குப் பதில் பிஎன்னுக்கு சொந்தமானது என எண்ணத் தோன்றும்.

பிஎன் அல்லாத அரசியல் கட்சிகள் செராமாக்களை (சொற்பொழிவுக் கூட்டங்கள்) நடத்துவதற்கு அனுமதி வழங்குவதில் போலீசார் தாரளமாக நடந்து கொள்வர் என எதிர்பார்க்கின்றீர்களா? கிஞ்சித்தும் வாய்ப்பு இல்லை.

பிஎன் மூத்த அரசியல்வாதிகளுக்கு பல அம்சங்கள் பணயம் வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் தோல்வி கண்டால் அவர்கள் எல்லாவற்றையும் இழந்து விடுவார்கள். ஆட்சிக் காலத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக அவர்களில் யாராவது கண்டு பிடிக்கப்பட்டால் அவர்களுடைய சுதந்திரமும் பறி போய் விடும்.

ஜனநாயகவாதி: தேர்தல் ஆணையத் தலைவரும் துணைத் தலைவரும் இங்கு வெளியிடுவது போன்ற அறிக்கைகளை இந்தியாவில் வெளியிட்டால் அவர்களை மக்கள் கூழாக்கி அப்பளமாக்கி விடுவார்கள்.

TAGS: