“அடுத்த முறை உங்கள் பேரணிகளில் சீனர்களுக்கு எதிராக நீங்கள் கக்கிய விஷத்தின் வீடியோ ஒளிப்பதிவுகளைப் போட்டுக் காட்டும் துணிச்சல் உங்களுக்கு உண்டா?”
இப்ராஹிம் அலி 10,000 ரிங்கிட் ‘ஆங் பாவ்’ கொடுத்தார்
மூண்டைம்: பெர்க்காசா நடத்திய அந்த நாடகத்தில் அந்த அமைப்பின் கபட வேடம் தெளிவாகத் தெரிகிறது.
மேலும் அந்த ‘ஆங் பாவ்’ களைக் கொடுக்க அது வெள்ளை கடித உறைகளைப் பயன்படுத்தியுள்ளது இப்ராஹிம் அலி, சீனர்களுடைய பழக்க வழக்கங்களையும் பாரம்பரியத்தை அறியாதவர் என்பதையும் காட்டி விட்டது.
சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை நடத்தியதின் மூலம் நீங்கள் சீனர்களுக்கு எதிராக செய்துள்ள தவறுகள் அனைத்துயும் போக்கி விடலாம் என நீங்கள் எண்ணுவதைப் போலத் தெரிகிறது.
அடுத்த முறை உங்கள் பேரணிகளில் சீனர்களுக்கு எதிராக நீங்கள் கக்கிய விஷத்தின் வீடியோ ஒளிப்பதிவுகளைப் போட்டுக் காட்டும் துணிச்சல் உங்களுக்கு உண்டா ? கூட்டத்தினர் உங்கள் கருத்தை ஒப்புக் கொள்வார்களா எனப் பார்ப்போம்.
அனாக் ஜேபி: அது வேண்டுமென்றே செய்யப்பட்டதா அல்லது அறியாமையா என்பது எனக்குத் தெரியவில்லை. உணர்வுகளை அறியாமல் செய்யப்பட்டதாக நான் கருதுகிறேன். வெள்ளை நிறம் சீனப் பண்பாட்டில் மரணத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
காலஞ்சென்றவருடனான உறவுகளைப் பொறுத்து கடித உறையில் வைக்கப்படும் பணம் வேறுபடும். ஆனால் அந்த பணம் ஒற்றைப் படையில் இருக்க வேண்டும். நல்லடக்கச் செலவுகளுக்கு உதவியாக அந்தப் பணம் குடும்பத்துக்குக் கொடுக்கப்படுகிறது.
மாற்றம்: வெள்ளை நிற ‘ஆங் பாவ்’ களை கொடுத்ததின் உண்மையான நோக்கம் இப்ராஹிம் அலி ஒருவருக்கு மட்டுமே தெரியும். என்றாலும் உண்மையில் அந்த வெள்ளை நிற கடித உறைகளைப் பெறுவதற்கு அவர் தீவிரமாக முயற்சி செய்திருக்க வேண்டும்.
காரணம், சிவப்பு நிற உறைகள் பேரங்காடிகளிலும் மளிகைக் கடைகளிலும் பத்திரிக்கை விற்பனை மய்யங்களிலும் வங்கிகளிலும் தாராளமாக கிடைக்கும். அவர் பத்தாயிரம் ரிங்கிட்டை எடுக்க வங்கிக்கு சென்ற போது அங்கு அந்த உறைகளை எளிதாக பெற்றிருக்க முடியும்.
ஆனால் அவர் அதனைச் செய்யவில்லை. மாறாக வெள்ளை நிற உறைகளை பயன்படுத்த முடிவு செய்தார். அது வேண்டுமென்றே செய்யப்பட்டதா அல்லது தற்செயலாக நிகழ்ந்ததா ? அதற்கான பதில் இப்ராஹிம் அலிக்கு மட்டுமே தெரியும்.
வீரா: அந்த இப்ராஹிம் கூட்டத்தில் பங்கு கொண்ட சீனர்களுக்கு கௌரவமே இல்லாதவர்கள். வெள்ளை நிற கடித உறைகளில் கொடுக்கப்படும் பணத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ளலாமா ?
சீ ஹோ சியூ: சிவப்பு வெள்ளை நிற கடித உறைகளின் அர்த்தத்தை பற்றி ஏதும் தெரியாத இப்ராஹிம் சீனர்களுக்கு ‘பாடம் கற்றுக் கொடுக்க’ முனைந்தது எனக்கு வியப்பை அளித்துள்ளது.
சீனப் புத்தாண்டின் போது சிவப்பு நிற உறைகளப் பயன்படுத்துவது மக்களுக்கு நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதற்கு சமமாகும்.
வெள்ளை நிற உறைகளை வழங்கியதின் மூலம் அவர் உண்மையில் அவற்றைப் பெற்றுக் கொண்டவர்கள் துயரமடைந்து மரணத்தைத் தழுவ வேண்டும் என அவர் விரும்புகிறார்.
வெள்ளை நிற உறைகள் பற்றி மூடத்தனமான நம்பிக்கை வேண்டாம் என அவர் சீனர்களிடம் சொல்வது பன்றித் தலை ஒன்று அவர் பெற்றுக் கொள்வதைப் போன்றதாகும். பன்றி இறைச்சியை உட்கொள்வது குறித்த மூட நம்பிக்கைகள் வேண்டாம் என அவரிடம் சொல்வதற்கு ஒப்பாகும்.
அவருடைய முட்டாள்தனத்தை நினைத்து எனக்கு சிரிப்பு வரும் வேளையில் அவரைப் போன்ற கோமாளிகள் பகிரங்கமாக பேசுவதற்கு ஏன் இன்னும் அனுமதிக்கப்படுகின்றனர் என்பது தான் எனக்குப் புரியவில்லை.
அந்த மனிதருக்கு இன ஒற்றுமையைப் பற்றி கவலை இல்லை. மற்ற இனங்களுக்கு அவர் மரியாதையும் கொடுப்பதில்லை. மலாய்க்காரர்களுடைய நல்வாழ்வு மீது அவருக்கு அக்கறை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இனவாத வழிகளில் தமக்கு ஆதரவைப் பெருக்கிக் கொள்வதே அவரது நோக்கமாகும்.
அந்தோனி சான்: சிவப்பு நிறை உறைகளுக்குப் பதில் வெள்ளை நிற கடித உறைகளை வழங்கியதின் மூலம் பெர்க்காசா அந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து முதிய சீனர்களையும் அவமானப்படுத்தியுள்ளது. அந்த நிகழ்வு நல்ல சிந்தனையைக் கொண்ட எல்லா மலேசியர்களுக்கும் ஆத்திரத்தை மூட்டி வரும் பொதுத் தேர்தலில் பிஎன் -னுக்கு ‘துரதிர்ஷ்டத்தை’ கொண்டு வரும் என நான் நம்புகிறேன்.
Z2XX: பெர்க்காசா சீனப் புத்தாண்டு நிகழ்வுக்குப் பதில் நல்லடக்க சடங்குகளை நடத்தியதாகத் தோன்றுகிறது. இப்ராஹிம் மற்ற பண்பாடுகளை மதிக்கவில்லை என்பதும் தெளிவாகிறது.
ஆர்டிஎம், டிவி3 கேமராக்கள் முன்பு நல்லவராகக் காட்டிக் கொள்ள இனவாதி ஒருவர் முயலும் போது இது தான் நடக்கும்.