சீனி இனிக்கும் ஆனால் அரசின் உதவித்தொகையின் அளவுக்கு இனிக்காது

“பிஜே உத்தாரா எம்பி டோனி புவா சொல்வது உண்மையா, இல்லை சொந்தமாக இட்டுக்கட்டிக் கூறுகிறாரா என்பது எங்களுக்குத் தெரிய வேண்டும்.உண்மையான புள்ளிவிவரங்களைத் தாருங்கள்.”

டிஏபி: அமைச்சர் சீனி உதவித்தொகை தொடர்பில் ‘மக்களை முட்டாளாக்க பார்க்கிறார்’

ஸ்வைபெண்டர்: ஆக, அத்தியாவசிய பொருள்களுக்கு உதவித் தொகை என்ற பெயரில் மக்களிடமிருந்து கமுக்கமாகக் கொள்ளையடிக்கிறார்கள்.

உதவித்தொகை கொடுப்பது அல்லது அதிகரிப்பது  ஏழைகளின் நலனில் அம்னோ-பிஎன் அக்கறை கொண்டிருப்பதைக் காண்பிப்பதாக பீற்றிக்கொள்கிறது அரசாங்கம். ஆனால், நுணுகி ஆராய்ந்து பார்த்தால் அதன்வழி மக்கள் பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

அம்னோபுத்ராக்களும் அவர்களின் அல்லக்கைகளும் கொள்ளையடிக்கும் கலையில் எவ்வளவு தந்திரமாக செயல்படுகிறார்கள் என்று பாருங்கள். அவர்கள் கொள்ளையடிப்பதை உணராமலேயே பொருளைப் பறிகொடுத்தவர்கள் கொள்ளையர்களுக்கு நன்றி கூறுகிறார்கள்.  மலேசியர்களே, விழித்துக் கொள்ளுங்கள், இல்லையேல் 2019-க்கு முன், உள்ளதெல்லாம் போய், தலையில் துண்டைப் போட்டுக்கொள்ளும் நிலை வந்துவிடும்.

கவனிப்பாளன்: மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கும் ஒரு புதிய வழிபோல் அல்லவா தோன்றுகிறது.

பிஎன் பணத்தைக் கொள்ளையிடும் வழக்கமான பாணி நமக்குத் தெரியும். வேண்டியவர்களுக்கு மிகப் பெரிய குத்தகைகளைக் கொடுத்து அதில் கிடைக்கும் ஆதாயத்தில் ஒரு பகுதியைக் கையூட்டாகப் பெறுவார்கள்; அல்லது பொருள்களைப் பெரும் விலை கொடுத்து வாங்குவார்கள் பின்னர் அதற்குப் பெரிய கமிஷனையும் பெறுவார்கள். அல்லது மகாதிர், சுயேச்சை மின் உற்பத்தியாளர்களுடன் ஒப்பந்தங்களைச் செய்துகொண்டு அவர்களிடமிருந்து 30விழுக்காட்டைப் பெற்றுக்கொண்டார் என்று கூறப்படுவதைப்போல்  செய்வார்கள் அல்லது என்எப்சி-க்குக் கொடுத்ததைப்போல் மில்லியன் கணக்கான ரிங்கிட்டைக் கடன் என்.ற பெயரில் தங்கள் அல்லக்கைகளுக்கு அள்ளிக் கொடுப்பார்கள். 

இப்போது யாரோ ஒரு கெட்டிக்கார அம்னோபுத்ரா, மூலப்பொருள்களின் விலை குறைந்திருந்தாலும் உதவித்தொகையை அதிகரிக்க முடிவு செய்திருக்கிறார்.

இப்பணம், வேண்டிய சிலருக்குச்  செல்லும். பிறகு, உயர்ந்த இடத்தில் உள்ள அம்னோபுத்ரர்களுக்குத் திரும்பி வரும். 

விடையன்: நான் நினைக்கிறேன், ‘சீனி மன்னன்’ ரோபர்ட் குவாக் எம்எஸ்எம்-மில் வைத்திருந்த பங்குகளை வாங்குவதற்கு பெல்டா பெற்ற ரிம198மில்லியன் கடனைத் தீர்ப்பதற்குத்தான் இந்தக் கூடுதல் உதவித் தொகை வழங்கப்படுகிறது என்று.

அப்பம்: அமைச்சர் அவர்களே, பதில் சொல்லும் பொறுப்பு உங்களுக்கு உண்டு.  பிஜே உத்தாரா எம்பி டோனி புவா சொல்வது உண்மையா, இல்லை சொந்தமாக இட்டுக்கட்டிக் கூறுகிறாரா என்பது மக்களாகிய எங்களுக்குத் தெரிய வேண்டும். உண்மையான புள்ளிவிவரங்களைத் தாருங்கள். எங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியது உங்கள் கடமை.

சேமுவல் இங்: தேவையற்ற உதவித் தொகையின்வழி பணம் வெளியேறுகிறது. இது யாரிடம் போகிறது?

ஜோ லீ: பிரமாதம் டோனி. மலேசியர்கள் சீனி உண்ணும்போதும் சீனி கலந்த பானங்களை அருந்தும்போதும் சைட் மொக்தார் அல்-புகாரியின் கல்லாப் பெட்டிதான் நிரம்பும்.

மக்களுக்கு நல்லது செய்வதாக அரசாங்கம் கூறிக்கொள்கிறது.ஆனால் நமக்குத் தெரியும், மேன்மேலும் கடன்வாங்கித்தான் இதைச் செய்கிறார்கள். இக்கடன் விரைவிலேயே ரிம500 பில்லியன் ஆகும். இந்தக் கடனையெல்லாம் அடுத்த தலைமுறை மலேசியர்கள்தான் சுமக்க வேண்டியிருக்கும்.

மாறிலி: ஓர் அமைச்சர் உண்மை அறியாமல் இப்படியா பேசுவது? செம அடி கொடுத்திருக்கிறார் புவா.

இப்படிப்பட்ட அமைச்சர்கள் இருக்கும்வரை மலேசியாவின் பற்றாக்குறை ஆண்டுக்காண்டு மோசமாகிக்கொண்டுதான் இருக்கும். நாடு பிழைக்க வேண்டுமானால் அரசாங்கம் மாற வேண்டும்.

TAGS: