மன்னிப்புக் கேட்க வேண்டிய தேவையில்லை; இப்ராஹிம் அலி அப்படிப்பட்டவர்தான்

“கெட்ட நோக்கம் ஏதும் இல்லை என்றாலும் கூட பெர்க்காசா உறுப்பினர்கள் வெளியில் வந்து மற்றவர்களுடைய பண்பாடுகளைப் பற்றி ஒரளவு கற்றுக் கொள்ள வேண்டும்.”

வெள்ளை அங் பாவ்: ஏதும் தெரியாது என பெர்க்காசா மன்றாடுகிறது

மலேசியாவில் பிறந்தவன்: அந்த உபசரிப்பில் கலந்து கொண்டிருந்தவர்கள் வெள்ளை நிற அங் பாவ் மீது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தால் மிகவும் கடுமையாக இருந்திருக்கும்.

முஸ்லிம் மலாய் சமூகங்களின் உணர்வுகளை நாம் நன்கு அறிந்துள்ளது போல சீன சமூகத்தில் நிறங்கள் கொண்டுள்ள முக்கியத்துவத்தை பெரும்பாலான மலேசியர்கள் அறிந்துள்ளனர்.

அந்த சம்பவம் உங்கள் கால்களை மேசைக்கு மேல் வைத்துக் கொண்டு பாதங்களை விருந்தினர்களுக்குக் காட்டுவதற்கு ஒப்பாகும்.

உண்மையில் அது கொடுமையானது. வெள்ளை கடித உறைகள் ஈமச் சடங்குகளுக்காகும். ஆகவே அவ்வாறு செய்துள்ளது உணர்வுகளைக் காயப்படுத்துவதாகும்.

துரதிர்ஷ்டவசமாக அந்த பெர்க்காசா மக்களுக்கு எப்படி மலேசியர்களாக இருப்பது என்பதே தெரியாது, புரியாது. மற்ற சமூகங்களுடன் அவர்கள் மேலோட்டமான உறவுகளை மட்டுமே வைத்திருப்பதால் மற்றவர்களுடைய பண்பாடுகள், உணர்வுகளை அவர்கள் பாராட்டுவதும் இல்லை. அனுதாபப்படுவதும் இல்லை.

இந்த வகையில் பெர்க்காசா பண்பாடு இல்லாதது. ஏதும் தெரியாதது. ஆகவே இப்படித்தான் நடக்கும் என நாம் எதிர்பார்க்கலாம். அவர்கள் மலாய்க்காரர்கள் அல்லது முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகள் அல்ல. நிச்சயமாக மலேசியர்கள் அல்ல.

அடையாளம் இல்லாதவன்_40a7: பெர்க்காசா தலைவர் எதுவும் தெரியாதவராக இருக்க வேண்டும் அல்லது முழு முட்டாளாக இருக்க வேண்டும். சீனப் புத்தாண்டின் போது வெள்ளை நிற கடித உறைகளைக் கொடுப்பது, தீபாவளியன்று இந்தியர்களுக்கு மாட்டிறைச்சியை வழங்குவதற்கு அல்லது உங்கள் திறந்த இல்ல உபசரிப்புக்கு வரும் முஸ்லிம் நண்பர்களிடம் பீயரும் பன்றி இறைச்சியும் மட்டுமே வழங்கப்படும் எனச் சொல்வதற்கு ஒப்பாகும்.

அவர் என்ன இவ்வளவு நாளாக குகைக்குள் வாழ்ந்து கொண்டிருந்தாரா?

பிபிலியோபிபுலி: கெட்ட நோக்கம் ஏதும் இல்லை என்றாலும் கூட பெர்க்காசா உறுப்பினர்கள் வெளியில் வந்து மற்றவர்களுடைய பண்பாடுகளைப் பற்றி ஒரளவு கற்றுக் கொள்ள வேண்டும்.

கிறிஸ்டபர் லாய்: அவர்கள் எந்த அளவுக்கு ‘மலேசியர்கள்’ என்பதை அந்த நிகழ்வு காட்டி விட்டது. இளம் வயதில் அவர்களுக்கு அங் பாவ் கிடைக்கவே இல்லலயா?

அவர்களுக்கு என்ன வயது? மலேசியா போன்ற அழகான பல இன நாட்டில் வசிக்கின்ற அவர்கள் தங்களுக்கு எதுவும் தெரியாது எனச் சொல்கின்றனர்.

ஜேம்ஸ்1067: நல்லது. தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தாங்கள் ஏற்படுத்தியுள்ள சேதங்களை அறிந்துள்ள இப்ராஹிமும் பெர்க்காசாவும் அவற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளன.

சீனர்களுடைய உள்ளத்தைக் கவர அவர்கள் இப்போது விரும்புகின்றனர். காரணம் அவர்களுக்கு சீனர் வாக்குகள் தேவை.

தேர்தல் முடிந்ததும் எல்லாம் பழைய பாணிதான். அங் பாவ் எந்த நிறத்தில் இருந்தது என்பது முக்கியமல்ல. நோக்கம் உண்மையானதா போலியானதா என்பதே முக்கியம்.

சிந்தனை: பெர்க்காசா பரஸ்பரம் புரிந்துணர்வு பற்றிப் பேசுகிறது. பல இனிப்பான வார்த்தைகள்.  ஆனால் சீனர்களுக்கு எதிராக அது கக்கியுள்ள விஷத்திற்கு மன்னிப்புக் கேட்கவே இல்லை.

இப்ராஹிம் அலி அவர்களே, உங்களை மலாய்க்காரர் அல்லாதார் இடத்தில் வைத்துப் பாருங்கள். நீங்கள் இது வரை சொன்ன விஷயங்கள் அல்லது செய்த வினைகள் குறித்த மலாய்க்காரர் அல்லாதாருடைய ஆத்திரம் அடங்கி விடும் என நீங்கள் எண்ணுகின்றீர்களா?

தயவு செய்து நீங்கள் உண்மையானவராக இருந்தால் சொன்னதைச் செய்யுங்கள். அழகான அலங்காரமான வார்த்தைகள் வேண்டாம். சொற்களைக் காட்டிலும் காரியங்களுக்கே வலிமை அதிகம்.

இறைவன் அல்ல: சீனர்கள் ஏன் சிவப்பு நிற உறைகளில் அங் பாவ் கொடுக்கின்றனர் என்பது இப்ராஹிம் அலிக்குத் தெரியாதா? இந்த நாட்டில் காலம் காலமாக வாழ்ந்து வரும் அவர் அதனை பார்க்கவே இல்லையா?

அவர் என்ன நிறம் தெரியாத குருடரா? அல்லது வெறும் முட்டாளா? எந்த அரசியல் கட்சியிலும் அவருக்கு சீன நண்பர்கள் இல்லை என்பதை அந்த நிகழ்வு காட்டி விட்டது.

சீனர்களைப் பொறுத்த வரையில் சிவப்பு என்பது நல்ல சகுனமாகும். வளப்பத்தையும் குறிக்கிறது. தமக்கு எதுவும் தெரியாது என அவர் எப்படிச் சொல்ல முடியும்?

டாரெல் டாமியான்: பரஸ்பரம் மரியாதை இல்லாத போது அதனை எப்படிப் பரப்புவது?

TAGS: