பிகேஆர்: டிஎபி “அம்னோவைப் போன்று தலைக்கனம்” கொண்டிருக்கக் கூடாது

டிஎபி சார்பில் மலாய் வேட்பாளர்கள் போட்டியிடுவதற்கு உதவியாக தனது தோழமைக் கட்சியான பிகேஆர்-டமிருந்து அதிகமான இடங்களை டிஎபி கோரியுள்ளது. அதனை பினாங்கு பிகேஆர் தகவல் பிரிவுத் தலைவர் ஜொஹாரி ஹஷிம் கண்டித்துள்ளார்.

13வது பொதுத் தேர்தல் விரைவில் நடத்தப்படாலும் என்னும் ஊகங்கள் அதிகரித்துள்ள வேளையில் டிஎபி மலாய் தலைவர் அத்தகைய அறிக்கைகளை வெளியிடுவது நல்லதல்ல என அவர் சொன்னார்.

அந்த அறிக்கையை விடுத்த டிஎபி மத்தியக் குழு உறுப்பினர் சுல்கிப்லி முகமட் நூர், “படகைக் கவிழ்க்கக் கூடாது” என ஜோஹாரிக்கு அறிவுரை கூறினார்.

அம்னோவைப் போன்று டிஎபி மாறக் கூடாது என கூறிய அவர், “அம்னோ அதிக வெற்றியை அடையும் போது நாட்டை ஆளும் கட்சியில் ஆதிக்கம் செலுத்துகின்றது. தலைக்கனமும் கூடி விடுகிறது.”

‘உண்மையில் பல இனமாக இருந்தால்….’

பினாங்கில் மலாய் டிஎபி உறுப்பினர்கள் போட்டியிட வேண்டிய அவசியம் இருந்தால் தற்போது அவர்கள் வசமிருக்கும் 19 தொகுதிகளில் சிலவற்றைக் கோர வேண்டும்,” என அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

“டிஎபி உண்மையிலேயே பல இனக் கட்சியாக இருந்தால் அதற்கு இப்போது ஒதுக்கப்பட்டுள்ள 19 இடங்களில் சில இடங்களை மலாய் உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும்.”

2013ம் ஆண்டு வரையில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய தேவை இல்லை என்றாலும் முன்கூட்டியே நவம்பர் மாதம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தேர்தலை நடத்தக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பினாங்கில் குறைந்தது ஒரு நாடாளுமன்றத் தொகுதியையும் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளையுமாவது பிகேஆர் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று  கேட்டுக் கொள்வதைத் தவிர டிஎபிக்கு வேறு வழி இல்லை என பினாங்கு மாநகராட்சி மன்ற உறுப்பினருமான சுல்கிப்லி குறிப்பிட்டார்.

தேர்தலில் டிஎபி மலாய் வேட்பாளர்களைக் களமிறக்கவில்லை என்றால் அது “மலாய் எதிர்ப்பு”க் கட்சி என முத்திரை குத்தப்படும் என்றார் அவர்.

மலாய் சமூகத்தைச் சார்ந்த வேட்பாளர்களை டிஎபி நிறுத்தாது என கட்சியின் மலாய் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் பல அரசு சாரா அமைப்புக்களும் எண்ணுவதால் தாம் அந்த விஷயத்தை எழுப்புவதாகவும் சுல்கிப்லி சொன்னார்

2008 மார்ச் பொதுத்தேர்தலில், பினாங்கில் சட்டமன்றத்துக்காக டிஏபி 19 இடங்களிலும் பிகேஆர் 16 இடங்களிலும் பாஸ் 5 இடங்களிலும் போட்டியிட்டன. நாடாளுமன்றத்துக்காக டிஏபி ஏழு இடங்களிலும், பிகேஆர் நான்கு இடங்களிலும் பாஸ் இரண்டு இடங்களிலும் போட்டியிட்டன.

அம்மூன்று கட்சிகளும் சட்டமன்றத்துக்காக போட்டியிட்ட 40 இடங்களில் 29-ஐயும் நாடாளுமன்றத்துக்கான போட்டியிட்ட 13 தொகுதிகளில் 11-ஐயும் வென்றன.

பக்காத்தானுக்கு முன்பு

பக்காத்தான் ராக்யாட் தோற்றம் பெறுவதற்கு முன்பு டிஎபி பல இடங்களை வெல்ல முயன்றது. ஆனால் தோல்வி கண்டது என்பதை ஜொஹாரி டிஎபி தலைவருக்கு நினைவுபடுத்தினார்.

பிகேஆர், அதன் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் ஆகியோருடைய தாக்கமே வெற்றிக்கான அம்சங்கள் என அவர் சொன்னார்.

பிகேஆர் பக்காத்தானில் “இளம்” கட்சியாக இருக்கலாம். ஆனால் 2008 தேர்தலில் அது 32 இடங்களை வென்றது என்றார் ஜொஹாரி.

“நடப்பு இட ஒதுக்கீடுகளுடன் நாம் கடுமையாக உழைத்து எல்லா இடங்களிலும் வெற்றி பெற நாம் ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொண்டால் அடுத்த பொதுத் தேர்தலில் பக்காத்தானுக்குள் அதிகாரச் சம நிலை நிலவும்.”

“பிஎன்-னுக்கு மாற்றாக பக்காத்தான் மீது நம்பிக்கை வைக்கலாம் என மக்கள் எண்ணுவதற்கு அது நல்ல அறிகுறியாகவும் இருக்கலாம்,” என அவர் மேலும் கூறினார்.

TAGS: