பெர்க்காசாவின் வெள்ளை அங் பாவ்-வுக்கும் அரசாங்கத்துக்கும் சம்பந்தமில்லை

பெர்க்காசா நடத்திய சீன புத்தாண்டு நிகழ்வின் போது பாரம்பரிய ‘அங் பாவ்’ சிவப்பு உறைகளுடன் வெள்ளை நிற கடித உறைகளும் பயன்படுத்தப்பட்டதற்கும் அரசாங்கத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியிருக்கிறார்.

அந்த அரசு சாரா அமைப்பின் தலைவர் நாடாளுமன்றத்தில் சுயேச்சை உறுப்பினர் என அவர் சொன்னார். பெர்க்காசா மலாய் வலச்சாரி போராட்ட அமைப்பாகும்.

“ஆகவே அதன் சீன புத்தாண்டு நிகழ்வில் விநியோகம் செய்யப்பட்ட வெள்ளை கடித உறைகளை அரசாங்கம் ஏற்றுக் கொள்வதாகக் கருதக் கூடாது,” என சீன மொழி ‘Ah Jib Gor’ என்னும் முக நூல் பக்கத்தில் எழுதியுள்ளார்.

“சீன பண்பாடு மீது நமக்கு சிறந்த புரிந்துணர்வு இருந்து பண்பாட்டு ரீதியில் ஒதுக்கப்பட்ட விஷயங்களை அறிந்து கொண்டால் அத்தகைய சர்ச்சைக்குரிய நிகழ்வுகளைத் தவிர்க்க முடியும் என நான் நம்புகிறேன்.”

“அங் பாவ்” என்றால் அது சிவப்பு உறை என நம் அனைவருக்கும் தெரியும். அதில் மற்ற வர்ணங்களைக் காட்டிலும் சிவப்பு ஆதிக்கம் செலுத்தும்.” அந்தச் சம்பவத்தை நாம் சமூக அனுபவமாக பயன்படுத்த வேண்டும் என்றார் அவர்.

சீன புத்தாண்டு திறந்த இல்ல நிகழ்வில் ‘அங் பாவ்’ கொடுப்பதற்கு வெள்ளை நிற கடித உறைகளைப் பயன்படுத்தியதின் மூலம் சீன சமூகத்தை அவமானப்படுத்தியதற்காக பெர்க்காசா மன்னிப்புக் கேட்க வேண்டும் என நேற்று அதனிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

சீன பழக்க வழக்கங்களின் படி வெள்ளை நிறக் கடித உறைகள் ஈமச் சடங்குகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

பெர்னாமா

TAGS: