அன்வார் “வாயை மூடிக் கொள்ளுங்கள்” என அந்த “முதியவர்” மகாதீரிடம் சொல்கிறார்

அந்த ‘முதியவர்’ டாக்டர் மகாதீர் முகமட் வீட்டில் அமைதியாக இருப்பது நல்லது என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார்.

“அந்த முதிய மனிதர் இன்னும் நிறுத்தவில்லையா? அது போதும். அவரது அவரது குடும்பத்தினரும்  ஏற்கனவே கொழுத்த பணக்காரராகி விட்டனர்,” என அவர் கோலாலம்பூரில் பத்து பிகேஆர் ஏற்பாடு செய்த சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பின் போது கூறினார். அந்த நிகழ்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

“அவர் அமைதியாக வீட்டில் இருந்து கொண்டு தமது பேரப் பிள்ளைகளைக் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும்,” என்று அன்வார் புன்னகையுடன் கூறினார்.

அந்த சீனப் புத்தாண்டு நிகழ்வை ஐந்து பிகேஆர் தொகுதிகள் இன்று ஏற்பாடு செய்துள்ளன. அதில் முதலாவது பத்து தொகுதி நிகழ்வாகும். தாம் இஸ்ரேலுக்கு அணுக்கமாக இருப்பதாக மகாதீர் கூறிக் கொள்வதையும் அன்வார் நிராகரித்தார்.

“நான் இஸ்ரேலுக்கு அணுக்கமானவன் என்று அவர் சொல்கிறார். அவர் இதற்கு முன்பு சீனர்களுக்கு நெருக்கமாக இருப்பதாகக் கூறினார். நான் பிரதமரானால் நாட்டை சீனர்களிடம் விற்று விடுவேன் என்று கூட அவர் சொல்லியிருக்கிறார்.”

“டேய் அண்ணே அது யார்?”

அண்மையில் நான் பொங்கல் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டேன். அப்போது நான் இந்திய தொப்பியை அணிந்திருந்தேன். அது காலஞ்சென்ற இந்தியத் திரைப்பட நடிகரான எம்ஜிஆர் அணியும் தொப்பியைப் போன்றதாகும். இனிமேல் அவர் நான் இந்தியர்களுக்கு அணுக்கமாக இருப்பதாகச் சொல்லப் போகிறாரா?” என அந்த பெர்மாத்தாங் எம்பி இடித்துரைத்தார்.

பெரும்பாலும் சீனர்களாக இருந்த கூட்டத்தினர் அவரது உரையை கைதட்டி வரவேற்றனர். முன்னதாக அவர்கள் சிங்க நடனத்துடன் அன்வாரை வரவேற்றனர்.

அன்வார் இன்று பிகேஆர் வெற்றி பெற்ற மேலும் நான்கு தொகுதிகள் ஏற்பாடு செய்துள்ள சீனப் புத்தாண்டு நிகழ்வுகளுக்கும் செல்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. வாங்சா மாஜு. பண்டார் துன் ரசாக். பிரிக்பீல்ட்ஸ், பந்தாய் ஆகியவையே அந்தத் தொகுதிகளாகும்.