எகிப்து கால்பந்து போட்டியில் கலவரம்: 73 பேர் பலி

எகி்ப்து நாட்டில் கால்பந்து போட்டியின் போது நடைபெற்ற மோதலி்ல் சுமார் 73 பேர் பலியாயினர்; ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

எகிப்து நாட்டில் உள்ளூர் கால்பந்து அணிகளான அல் அலி மற்றும் அல் மாஸ்ரி ஆகிய இரு அணிகளுக்கும் பலத்த ரசிகர்கள் ஆதரவு இருந்து வந்தது. இந்நிலையில் சிட்டி ஆப் போர்ட் நகரில் மேற்கண்ட இரு அணிகளும் மோதும் போட்டிக்கு ஏற்பாடாகியது.

போட்டிய‌ை காண ஆவலுடன் ரசிகர்கள் விளையாட்டுத் திடலில் திரண்டிருந்தனர். இந்நிலையில் போட்டி துவங்குவதற்கு கால தாமதம் ஏற்பட்டதாகவும் அதனையடுத்து ரசிகர்கள் ஒருவருக்கொருவர் தங்களது அணிகளை ஆதரித்து ரகளையி்ல் ஈடுபட்டனரர்.

திடீர் வன்முறை காரணமாக 73 பேர் பலியாயினர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ரசிகர்களிடையே உண்டான மோதல் எகி்ப்து கால்பந்து வரலாற்றில் இது ஒரு மோசமான விளைவு என எகிப்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இது ஒரு மிகப்பெரிய வரலாற்று கறை என சுகாதாரத்துறை ‌அமைச்சர் கருத்து தெரிவித்தார்.