அமெரிக்காவை மிரட்டும் ‘ஐரீன்’ சூறாவளி

‘ஐரீன்’ சூறாவளி இன்று அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையை கடுமையாகத் தாக்கும் என, வானியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால், அப்பகுதியில் உள்ள ஏழு மாகாணங்களில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வட அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் சூறாவளி அடிக்கடி உருவாவது வழக்கம். இந்த சூறாவளி உருவாகும் காலகட்டம், ‘அட்லாண்டிக் பருவம்’ என அழைக்கப்படுகிறது. இந்தாண்டில் இப்பருவம், கடந்த ஜூன் 1-ம் தேதி துவங்கி, நவம்பர் 30-ம் தேதியோடு முடிவடைகிறது.