தாமான் துன் டாக்டர் இஸ்மாயிலில் உண்மையிலேயே ஒரே மலேசியா வெறுப்பு இயக்கம்

அந்த “வெறுப்பு பிரமுகர்கள்” உண்மையில் ஒரே மலேசியா பிரதிநிதிகள்- ஒரு மலாய்க்காரர், ஒரு சீனர், ஒர் இந்தியர் என்பது தற்செயலாகத் தோன்றவில்லையா?” 

குவான் எங், அம்பிகா ‘வெறுப்பு’ சுவரொட்டிகள் மீது டிஏபி கலங்கவில்லை

மாற்றம்: பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் தமது மாநிலத்தை மிகவும் மெச்சத்தக்க வகையில் நிர்வாகம் செய்து வர வேண்டும். அதனால் தான், வெகு தொலைவில் தாமான் துன் டாக்டர் இஸ்மாயிலில் உள்ள அவர் நிலைத்திருப்பது குறித்து வெறுப்பைத் தூண்டுகின்றவர்களும் அம்னோ அனுதாபிகளும் மருட்டலுக்கு இலக்காகி இருக்க வேண்டும்.

பினாங்கில் அவர் செய்து வருகின்ற பணிகள் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளன என்பதே அதன் அர்த்தம். அம்னோவைச் சார்ந்தவர்கள் அதனை அச்சத்துடன் பார்க்கின்றனர்.

இன்னொரு சுவரொட்டியைப் பொறுத்த வரையில் ‘அம்பிகாவுக்கு அளிக்கும் வாக்கு, கட்டுப்பாடற்ற செக்ஸுக்கு அளிக்கும் வாக்கு’ என எழுதப்பட்டுள்ளது. அது உண்மையில் அந்த சுவரொட்டியைத் தயாரித்தவர்களுடைய முட்டாள்தனத்தைக் காட்டுகிறது. காரணம் பொதுத் தேர்தலில் போட்டியிட அம்பிகா ஸ்ரீனிவாசன் திட்டமிடவே இல்லை. ஆகவே இந்த இடத்தில் ‘வாக்கு’ என்ற சொல் பொருத்தமானதாக இல்லை.

இன்னொரு விஷயம், அவர்கள் அம்பிகா, தேசிய இலக்கியவாதி ஏ சாமாட் சையட் ஆகியோரது சுவரொட்டிகளை Gucci, Burberry பொருட்களுக்கான விளம்பரப் பலகைக்கு கீழ் ஒட்ட அவர்கள் முடிவு செய்தது மகத்தான விஷயமாகும்.

அந்த வகையில் அதற்குப் பதில் ரோஸ்மா மான்சோருடைய படத்தை ஒட்டியிருந்தால் பொருத்தமாக இருக்கும் என நான் எண்ணுகிறேன்.

பெர்ட் தான்: அந்த “வெறுப்பு பிரமுகர்கள்” உண்மையில் ஒரே மலேசியா பிரதிநிதிகள்- ஒரு மலாய்க்காரர், ஒரு சீனர், ஒர் இந்தியர் என்பது தற்செயலாகத் தோன்றவில்லையா?

உண்மையில் அந்த மூவரும்-லிம் குவான் எங், பெர்சே அம்பிகா, சாமாட் சையட்- ‘உண்மையான மலேசியாவுக்கு’ சான்றாகத் திகழ்கின்றனர்.

அந்த நடவடிக்கைக்கு பின்னணியில் யார் இருக்கின்றனர்? அவர்கள் அந்த மூவரையும் அவமானப்படுத்துவதற்குப் பதில் தங்கள் செலவில் அந்த மூவருக்கும் நல்ல விளம்பரம் கொடுத்துள்ளனர்.

அவர்களுடைய தோற்றத்துக்கும் பெருமைக்கும் எந்தப் பங்கமும் ஏற்படவில்லை. உறுதியாக இருக்கிறது. அதனால் அந்தச் சுவரொட்டிகள் அவர்களைக் காயப்படுத்தப் போவதில்லை.

முரசு: என்ன வேடிக்கை. கோழைத்தனமான முறையில் அவதூறு கூறப்பட்டுள்ள அந்த மூவரும் உண்மையில் பெரும்பாலான மிதவாத மலேசியர்களுடைய பார்வையில் வீரர்கள் ஆவர். நியாயத்துக்கும் உண்மைக்கும் போராடுவதற்கு அவர்கள் எப்போதும் அஞ்சியதில்லை.

அத்துடன் அந்த சுவரொட்டிகளை வைத்த போக்கிரிகள், தவறான இடத்தில் அவற்றை வைத்து விட்டனர். தாமான் துன் டாக்டர் இஸ்மாயில் வசிக்கும் மக்களில் பெரும்பாலோர் கல்வி கற்ற நடுத்தர வர்க்கத்தினர்.

இத்தகைய குப்பைகளுக்கு அவர்கள் மயங்கி உணர்வுகளுக்கு அடிமையாகி விட மாட்டார்கள். உண்மையான மலேசிய வீரர்கள் யார் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.

அபாஸிர்: விரக்தி அடைந்த, தார்மீக நெறிகள் இல்லாத, முற்றிலும் ஈவிரக்கமற்ற மனிதர் ஒருவர் தரமே இல்லாத ஒரு கட்சியை வழி நடத்தும் போது அவருடைய ஆதரவாளர்களிடமிருந்து இது போன்ற நடவடிக்கைகளைத் தவிர வேறு எதனையும் நீங்கள் எதிர்பார்க்க முடியாது.

ஷானாண்டோ: விரைவில் நிகழப் போகும் மாற்றங்களைக் கண்டு அந்த கதாபாத்திரங்கள் அஞ்சுவது தெளிவாகத் தெரிகிறது. நியாயத்துக்குப் போராடுகின்ற பொறுப்பு மிக்க தலைவர்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் இயக்கத்தை அவர்கள் எவ்வளவு நடத்துகின்றனரோ அந்த அளவுக்கு 13வது பொதுத் தேர்தலில் அந்தத் தலைவர்களைப் பதவியில் அமர்த்துவதற்கு வாக்காளர்களுடைய உறுதி அதிகரிக்கும்.

அந்தச் சுவரொட்டிகள் உண்மையில்  பல இன மதச் சார்பற்ற இந்த நாட்டிலிருந்து விரைவில் ஒடப் போகும் தங்களது சொந்த ஊழல் தலைவர்களையே கேவலப்படுத்துகிறது.

அடையாளம் இல்லாதவன்: பள்ளிவாசல்களில் பன்றித் தலைகளை வீசிய அரசியல் ரீதியில் விரக்தி அடைந்தவர்களே இந்த கோழைத்தனமான அசிங்கமான  நடவடிக்கையையும் மேற்கொண்டிருக்க வேண்டும்.

மக்கள் முட்டாள்கள் என்றும் தங்களுடைய பொய்களும் பொய்மைகளும் நிறைந்த தங்களது தீய நடவடிக்கைகளை நம்புவர் என்றும் அவர்கள் எண்ணுகின்றனர். மக்களைக் குழப்பவும் தவறாக வழி நடத்தவும் அவர்கள் இன்னும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள மேற்கொள்ள அவர்களுடைய வீழ்ச்சியும் துரிதமடையும்.

நியாயமானவன்: பேரரசு வீழ்வது உறுதியாகும் போது அதன் தலைவர்கள் தங்களுக்கே தெரியாமல் இது போன்ற மடத்தனமான நடவடிக்கைகள் மூலம் எதிர்காலத் தலைவர்களுக்கு  விளம்பரத்தைக் கொடுத்து விடுவார்கள். 13வது பொதுத் தேர்தலில் அம்னோ வீழ்ச்சி அடையும் போது அந்த ஆரூடம் சரியானதாகி விடும்.

அனோன்99: பக்காத்தான் ராக்யாட் ஆதரவாளர் என்னும் முறையில் லிம் குவான் எங் மலாய்க்காரர்கள் நலன்களில் மட்டுமே அக்கறை காட்டுகிறார் என்ற எண்ணம் மலாய்க்காரர் அல்லாத வாக்காளர்களிடையே வலுவடைந்து வருவதை ஒப்புக் கொள்கிறேன்.

சட்டவிரோதமாக கடைகளை அமைத்துள்ள வணிகர்கள் மீது ஊராட்சி மன்றங்கள்-குடியிருப்பாளர்கள் புகார் செய்தும்- ஊராட்சி மன்றங்கள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதைப் பாருங்கள்.

நீங்கள் எல்லா இனங்களுக்குமான முதலமைச்சராக இருந்தால் உங்கள் கட்சி மாநாட்டில் ஏன் முஸ்லிம் தொழுகைக்கு அனுமதித்தீர்கள்? மற்ற சமயங்களைச் சார்ந்தவர்கள் பிரார்த்தனை நடத்த நீங்கள் அனுமதிக்கவில்லையே? நீங்களும் பிஎன் -னில் உள்ளவர்களைப் போன்று இன அட்டையைப் பயன்படுத்துகின்றீர்கள் என்பதை அது காட்டுகிறது. 

அரமாகெடோன்: லிம் குவான் எங் மலாய் எதிர்ப்பாளர் என அந்தச் சுவரொட்டி  கூறுகிறது. இது போன்ற மடத்தனமான நடவடிக்கைகளினால் என்னைப் போன்ற மலாய்க்காரர்கள் கூட மலாய்க்காரர்களை வெறுக்கத் தொடங்கி விடுவர்.

TAGS: