இண்ட்ராப் எனப்படும் இந்து உரிமை நடவடிக்கைக் குழு விடுத்த கடந்த காலக் கோரிக்கைகளை பிரதமர் “நிறைவேற்றிய தவறியதை” ஆட்சேபிக்கும் வகையில் வரும் செவ்வாய்க்கிழமை கோலாலம்பூர் பத்துமலையில் தைப்பூசத் திருவிழா நடைபெறும் போது அந்த அமைப்பு 100,000 கையெழுத்துக்களை திரட்டத் திட்டமிடுகிறது.
தைப்பூசத் தினத்தன்று காலை 9.00 மணிக்கு அந்த இயக்கம் தொடங்கும். பத்துமலை கோவில் வளாகத்துக்கு பிரதமர் துன் அப்துல் ரசாக் அந்த நேரத்தில்தான் வருகை புரிவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2007ம் ஆண்டு பிஎன் அரசாங்கத்திடம் ஹிண்ட்ராப் சமர்பித்த 18 அம்சக் கோரிக்கைகள் பற்றி நஜிப்புக்கு நினைவுபடுத்துவதே அந்த இயக்கத்தின் நோக்கம் என இண்ட்ராப் மூத்த தலைவர் பி உதயகுமார் கூறினார்.
“சம நிலை, சமமான வாய்ப்புக்கள், தேசிய மேம்பாட்டு நீரோட்டத்திலிருந்து ஏழை இந்தியர்களை ஒதுக்கி வைக்கும், பிரித்து வைக்கும் அனைத்து அரசாங்க ஆதரவு பெற்ற, தனியார் துறை இனவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவது ஆகியவை 2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி இண்ட்ராப் சமர்பித்த 18 கோரிக்கைகளில் அடங்கும்- ஐந்து ஆண்டுகளாகியும் இன்று வரை பிரதமர் நஜிப் ரசாக் வழி நடத்தும் அம்னோ நிறைவேற்றவில்லை,” என்றார் உதயகுமார்.
“பத்துமலைக் கோவில் நுழைவாயிலில் இண்ட்ராப்பின் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும். ‘இனவாத நிலையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டிய அவசியத்தை மீண்டும் வலியுறுத்துவதுவதையும்’ அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு பிரதமரைக் கேட்டுக் கொள்வதையும் அந்த இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.”