“அரசாங்கம் பயன்படுத்துவது எங்கள் ஒய்வுக் கால நிதி”

“நீங்கள் விளையாடுவதற்கு அது உங்கள் தாத்தாவுடைய பணம் அல்ல. இபிஎப்-பிலிருந்து ஒரு சென் கூட எடுப்பதற்கு உங்களுக்கு அனுமதி இல்லை என்பதை நான் பிரதமருக்கு நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.”

புவா: எளிதான வீட்டுக் கடன் இபிஎப் சட்டத்தை மீறுகிறது

ரிக் தியோ: இபிஎப் என்ற ஊழியர் சேம நிதிக்கு சந்தா செலுத்துவோரில் கணிசமான பகுதியினர் மலாய்க்காரர் அல்லாதார் என்னும் உண்மையை அரசாங்கம் மறைத்து விட்டது. 

பெரும்பாலும் அரசாங்கச் சேவையில் உள்ள மலாய்க்காரர்கள் இபிஎப்-க்கு சந்தா செலுத்துவதில்லை.

அதனால் இபிஎப்-பிலிருந்து எடுக்கப்படும் எந்தப் பணமும் மலாய்க்காரர் அல்லாதாருக்குச் சொந்தமானதாகும்.

இபிஎப் நொடித்துப் போனால் அது மலாய்க்காரர் அல்லாதாருடைய பணம் ஆகும். அரசாங்கம் கவலைப்படப் போவதில்லை. 1961ம் ஆண்டுக்கான இபிஎப் சட்டத்தை அரசாங்கம் மீறுகிறது என ஒரு சந்தாதாரர் இபிஎப் மீது வழக்குப் போட முடியுமா?

கேள்வி: நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க பில்லியன் கணக்கான ரிங்கிட் செலவு செய்யப்பட்டுள்ளது. நாம் ஏன் அந்தப் பணத்தை மிச்சப்படுத்தி வீடுகள் தேவைப்படும் ஏழை மக்களுக்கு செலவு செய்யக் கூடாது?

மக்கள் நலன் மீது உண்மையில் அக்கறை இருந்தால் ஆயுதங்களையும் நீர் மூழ்கிகளையும் வாங்குவதற்குச் செலவு செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் அந்தச் செலவுகளை நிறுத்தினால் உபரி கூட கிடைக்கும்.

மறு பிறவி: எதிர்க்கட்சிகள் எந்த விஷயத்தையும் ஒதுக்குவதே இல்லை. தங்கள் தலைக்கு உயரே கூரை இல்லாத மக்களுக்கு வீட்டு வசதிகளை வழங்கும் விஷயத்தைக் கூட அவை விட்டு வைக்கவில்லை. அடுத்து அவை எதனை எதிர்க்கப் போகின்றன?

நீங்கள் காத்துக் கொண்டிருக்கு அடுத்த அரசாங்கமாக இருந்தால் யோசனைகளைச் சொல்லுங்கள். நீங்கள் ஒன்றை எதிர்த்தால் அதற்கான தீர்வை வாக்காளர்களுக்கு நீங்கள் காட்டுவதற்கு இதுவே நல்ல வாய்ப்பு.

இனிமேல் நெடுஞ்சாலைகள் இல்லை, வீடற்றவர்களுக்கு வீடமைப்புத் திட்டங்கள் இல்லை, பக்காத்தான் ராக்யாட் ஆட்சிக்கு வந்தால் இன்னும் என்ன என்ன நடக்குமோ? நாடும் மக்களும் காத்திருக்கும் போது அவை இப்போது செய்வதைப் போன்று ஒன்றை ஒன்று எதிர்த்துக் கொண்டிருக்கும்.

மலேசிய இனம்: நோக்கம் நல்லதாக இருந்தாலும் நீங்கள் ‘கொலை செய்யக் கூடாது’ என்றுதான் பிஜே உத்தாரா எம்பி டோனி புவா சொல்ல வருகிறார். அந்த அரசாங்கத் திட்டத்தின் நோக்கம் நல்லதா இல்லையா என்பது கூட நமக்குத் தெரியாது.

அந்தத் திட்டம் 1991ம் ஆண்டுக்கான இபிஎப் சட்டத்துக்கு முரணானது என புவா சுட்டிக் காட்டும் போது அவர் ஏன் தீர்வுகளை வழங்க வேண்டும்?

அத்துடன் நீங்கள் விளையாடுவதற்கு அது உங்கள் தாத்தாவுடைய பணம் அல்ல. 1.5 பில்லியன் ரிங்கிட் மிகவும் குறைந்த பணம் எனச் சொல்வது மிக வேடிக்கையாக இருக்கிறது.

கடந்த நான்கு தசாப்தங்களாக நான் மாதந்தோறும் சில ஆயிரம் ரிங்கிட்டுகளை தவறாமல் இபிஎப்-க்கு செலுத்தி வருகிறேன். நீங்கள் செய்வது தவறு என நான் சொல்கிறேன்.

உண்மையில் அரசாங்கம் உதவி செய்ய விரும்பினால் கடன்/உத்தரவாதத்தை முறையாக எடுக்க வேண்டியது தானே?

மச்சா97: இபிஎப்-பிடம் உள்ள தொகையை ஒப்பிட்டால் 1.7 பில்லியன் ரிங்கிட் சிறிய தொகை என ஒரு முட்டாள் மட்டுமே சொல்வான்.  இபிஎப்-பிலிருந்து ஒரு சென் கூட எடுப்பதற்கு உங்களுக்கு அனுமதி இல்லை என்பதை நான் பிரதமருக்கு நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

முன்னேற்றம்: என் இபிஎப் கணக்கில் உள்ள தொகை குறித்து அதன் அதிகாரிகளுடன் நான் வாதம் நடத்திய போது இவ்வாறு என்னிடம் கூறப்பட்டது:

“உங்கள் பணம் இபிஎப்-பில் இருக்கும் வரை அது எங்கள் பணம். நாங்கள் அந்தப் பணத்தை உங்களுக்குத் திருப்பிக் கொடுக்கும் போதுதான் அது உங்கள் பணமாகும்”

அதுதான் இபிஎப் சிந்தனை. நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தின் காவலர்களாக அவர்கள் தங்களைக் கருதவில்லை. இபிஎப்-பின் கட்டுப்பாட்டை அகற்றுவதற்கு நாம் போராட வேண்டும். இல்லை என்றால் அப்பட்டமாக அத்துமீறல்கள் தொடரும். நிற்காது.

பீட்ஸ்டாப்: எனக்கு 50 வயதாகும் போது நான் முன்கூட்டியே ஒய்வு பெற்று என் இபிஎப் பணத்தை மீட்க விரும்புகிறேன். இபிஎப் நிதியை தனது தனிப்பட்ட சேமிப்பாக இந்தத் திறமையற்ற அரசாங்கம் கருதுவதால் அங்கு என் பணம் இருப்பது மிகவும் ஆபத்தாகும்.

TAGS: