“மகாதீர் அவர்களே, பிரச்னையைத் தொடக்கி வைத்ததே நீங்கள்தான். நீங்கள் துணிச்சலாக அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். மற்றவர் மீது பழி போடக் கூடாது.”
டாக்டர் மகாதீர்: முறையைக் குறை சொல்ல வேண்டாம். தலைவர்கள் மீது பழி போடுங்கள்
டாக்ஸ்: தலைவர்கள் செய்த தவறு. மகாதீர் அவர்களே, நீங்கள் சொல்வது சரியான வார்த்தை. பிஎன் மாதிரி தோல்வி கண்டதற்கு மோசமான தலைமைத்துவத்தையே குறை கூற வேண்டும்.
ஆனால் பிஎன் சீரழிவதற்கு நீங்களும் உங்கள் தலைமைத்துவமும் ஆற்றிய பங்கிலிருந்து நீங்கள் தப்பிக்க முடியாது.
ஸ்விபெண்டர்: ‘முறையைக் குறை கூற வேண்டாம். தலைவர்கள் மீது பழி போடுங்கள்’. துன் டாக்டர் மகாதீர் இங்கு மிக நல்ல கருத்தைச் சொல்லியிருக்கிறார். அவர் இரண்டு தலைவர்களையுமே தேர்வு செய்தார்.
அப்துல்லா அகமட் படாவியை நேரடியாகவும் நஜிப் ரசாக்கை மறைமுகமாகவும் அவர் தேர்வு செய்தார். அந்த இரு தலைவர்களையும் தேர்வு செய்த தம்மை அவர் ஒரு போதும் குற்றம் சாட்டிக் கொண்டதில்லை.
எல்லா அதிகாரத்துவக் கொள்கைகளும் பல இன ஆதரவுடன் இணக்க அடிப்படையில் அம்னோ தலைமையிலான அரசாங்கம் உருவாக்குகின்றது என்னும் தோற்றத்தைத் தரும் வகையில் மற்ற அனைத்து பிஎன் உறுப்புக் கட்சிகளையும் அவர் சேவகர்களாக மாற்றி விட்டார்.
அம்னோ/பிஎன் கூட்டணி அரசாங்கத்தில் காணப்படுகின்ற பலவீனங்களுக்கு தாம் காரணம் என அவர் ஒப்புக் கொள்ளவே இல்லை.
அடையாளம் இல்லாதவன் பெர்சே: நல்ல தலைவர்களை உருவாக்க இயலாவிட்டால் அந்த முறை மோசமானது என அர்த்தம். ஆகவே அந்த முறை மாற்றப்பட வேண்டும்.
உங்கள் பின்னால்: எனக்கு அழுவதா அல்லது சிரிப்பதா என்பது தெரியவில்லை. மகாதீருக்கு தமது சொந்த அபத்தத்தையே தெரியவில்லை. உங்களுக்கு அடுத்து வந்த அம்னோ தலைவர்கள் நீங்கள் காட்டிய மோசமான எடுத்துக்காட்டைப் பின்பற்றுகின்றனர். முதலில் அவர் தம்மைப் பிரதமராகவும் நிதி அமைச்சராகவும் நியமித்துக் கொண்டார். பிரதமர் கைகளில் இவ்வளவு அதிகாரம் இருந்ததே இல்லை.
டூட்: இதில் வினோதம் என்னவெனில் மோசமான பிஎன் தலைவர் மகாதீரைத் தவிர வேறு யாருமில்லை. நம் நாட்டில் இதர பல விஷயங்களுடன் இனவாத, சமயவாத சீரழிவைத் தொடக்கி வைத்ததும் அவரே.
டாக்டர் சுரேஷ் குமார்: அப்துல்லா காலத்தில் நான் எந்த கொள்கை மாற்றத்தையும் காணவில்லை. இனவாத்தையும் சேவகர்களுக்கு உதவும் போக்கையும் அடிப்படையாகக் கொண்டு நீங்கள் உருவாக்கிய பல கொள்கைகள் இன்று வரை தொடருகின்றன. அப்துல்லாவை ஏன் குறை சொல்ல வேண்டும்?
சிரமமான பொருளாதார கால கட்டத்தில் தேவையில்லாத திட்டங்களை ரத்துச் செய்ததின் மூலம் அப்துல்லா நாட்டுக்கு பில்லியன் கணக்கான ரிங்கிட்டைக் காப்பாற்றிக் கொடுத்துள்ளார். அறிந்தோ அறியாமலோ அப்துல்லா பேச்சுரிமைக்குக் கூடுதல் இடம் கொடுத்து விட்டார். அது உங்களுடைய 22 ஆண்டு கால ஆட்சியில் நினைத்துப் பார்த்த்திருக்கவே முடியாது.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். உங்களுடைய ஈவிரக்கமில்லாத பாகுபாடான கொள்கைகளினால் புதிய நகர்ப்புற ஏழைகளாகி விட்ட ஆயிரக்கணக்கான இந்தியர்களுடைய கண்ணீர் உங்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும். அதற்காக ஆண்டவன் உங்களை மன்னிக்கட்டும்.
கீ துவான் சாய்: ஆம் நாம் கொள்கைகளையும் குறை கூற வேண்டும். அந்தக் கொள்கைகளை உருவாக்கிய மனிதர் மகாதீரே தவிர வேறு யாரும் இல்லை