ஷரிசாட் கும்பல் வெறுமனே மறுப்புத் தெரிவித்துத் தப்பித்துக்கொள்ள முடியாது

“இத்தனை ஆடம்பர கொண்டோ-கள் வாங்கி இருக்கிறீர்கள். என்எப்சி-க்கு எளிய நிபந்தனைகளில் கொடுக்கப்பட்ட கடனைக்கொண்டு  வாங்கவில்லை என்றால் இதற்குப் பணம் எங்கிருந்து வந்தது என்று காண்பியுங்கள், உங்களை விட்டு விடுகிறோம்.”

என்எப்சிமீது வஞ்சகமான தாக்குதல் என்று பொறுமுகிறார் இஸ்ரான்

எக்காளம்: நெருப்பில்லாமல் புகையில்லை என்ற பழமொழி நாம் அறிந்ததுதானே. குற்றச்சாட்டுகளைப் பொய்யாக்க சான்றாதாரங்களைக் காண்பிக்க வேண்டும். அதை விடுத்து பிகேஆரைத் திட்டுவதன்வழி நம் கவனத்தைத் திசைதிருப்பப் பார்க்கிறார் நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன்(என்எப்சி) நிர்வாக இயக்குனர் வான் ஷஹினுர் இஸ்ரான் சாலே.

இது வேளைக்கு ஆகாது. ஏனென்றால், மறுக்கமுடியாத அளவுக்கும் புறக்கணிக்க முடியாத அளவுக்கும் ஆதாரங்கள் கொட்டிக்கிடக்கின்றன. இதுவரை தெரியவந்ததை வைத்துப் பார்க்கும்போது நம் கண்முன்னே பகல்கொள்ளையே நடந்துள்ளது.

மக்கள் கொதிப்படைந்துள்ளனர். அதைஇதைச் சொல்லி அவர்களை ஏமாற்ற முடியாது.

கோசோங்கபே: விலைமிகுந்த கார்கள், கொண்டோமினியம்கள், நிலங்கள் வாங்கப்பட்டுள்ளன.உங்கள் பணத்தில்தான் இவை வாங்கப்பட்டன என்றால் ஆதாரம் காட்டுங்கள். அவர்கள் சொல்வதெல்லாம் பொய் என்பதை ஒப்புக்கொள்கிறோம்.

விழிப்பானவன்: இஸ்ரான், நீங்களும் உங்கள் குடும்பத்தாரும்தான் கதை கட்டுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.பிகேஆர் குறிப்பிட்ட பல விசயங்கள் பொதுமக்களுக்குத் தெரியாதவை. அப்படி இருக்க, எந்தத் துணிச்சலில் எல்லாம் வெளிப்படையாகவே நடந்துள்ளதாகக் கூறுகிறீர்?

சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் ஆடம்பர கொண்டோமினியம்களை நீங்கள் வாங்கியது எங்களுக்குத் தெரியாது. அவர்கள் கூறிய எந்தவொரு குற்றச்சாட்டையும் நீரோ உமது குடும்பத்தாரோ மறுக்கவுமில்லை உறுதிப்படுத்தவுமில்லை. அதனால், ஆத்திரம் அடையும் உரிமை உங்களுக்கு இல்லை. ஆத்திரம் அடைய வேண்டியவர்கள் நாங்கள்தான். 

கொள்ளைப்புற வாசல்வழி அமைச்சரான ஒருவர் இப்படியோர் ஆதாயகரமான ஏற்பாட்டைச் செய்துகொள்ள முடிகிறது என்றால் அவரைக் காட்டிலும் செல்வாக்குமிக்க அமைச்சர்கள் தங்களுக்காகவும் தங்கள் குடும்பத்தாருக்காகவும் என்னவெல்லாம் செய்துகொண்டிருப்பார்கள்.

லிம் சொங் லியோங்: பக்காத்தான் ரக்யாட் உண்மைகளைத் திரித்துக்கூறுவதாகச் சொல்கிறார்கள். அப்படியானால், உண்மைதான் என்ன?அது என்னவென்பதை இன்னமும் நீங்கள் காண்பிக்கவில்லையே.

செய்தியாளர் கூட்டங்களுக்கும் கலந்துரையாடலுக்கும் ஏற்பாடு செய்துவிட்டு நேரம்கழித்து வருவீர்கள், எதற்குமே பதிலளிக்காமல் விரைவாக சென்றுவிடுவீர்கள்.

இத்தனை ஆடம்பர கொண்டோகள் வாங்கி இருக்கிறீர்கள். என்எப்சி-க்கு எளிய நிபந்தனைகளில் கொடுக்கப்பட்ட கடனைக்கொண்டு  வாங்கவில்லை என்றால் இதற்குப் பணம் எங்கிருந்து வந்தது என்று காண்பியுங்கள், உங்களை விட்டு விடுகிறோம்.

ஸ்மைக்27:  இஸ்ரான், நீங்கள் சொல்வது உண்மை. நீங்கள் எதையும் ஒளிக்கவில்லை. நீங்கள்தான் ஒளிந்துகொண்டிருக்கிறீர்கள்.உங்கள் நிறுவனத்தின் கணக்குவழக்குகளைக் காண்பித்து தலைமைக் கணக்காய்வாளரும் பக்காத்தானும் கூறியது பொய் என்பதை நிரூபியுங்கள்.

வேலிமேல் உள்ளவன்:இந்த மனிதர் மாதச் சம்பளமாக ரிம20,000-ரிம30,000 பெறுகிறார். புத்திசாலியாக இருந்தால் கொண்டோமினியம்கள், மெர்சிடிஸ்  பென்ஸ்,வெளிநாட்டுச் சுற்றுலா முதலியவற்றுக்குப் பணம் எங்கிருந்து வந்தது என்பதை விளக்க வேண்டும்.

ஷானோண்டோவா: இஸ்ரான், உமக்கு  ஏன் இவ்வளவு பெரிய சம்பளம்? 27 வயதில் மாடுவளர்ப்புக்காக இவ்வளவு பெரிய சம்பளத்தைப் பெறும் தகுதி உமக்கு இருக்கிறதா?

நீங்களும் உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களும் சேர்ந்து மாதச் சம்பளமாக சுமார் ரிம215,000 பெறுகிறீர்கள்.முதலில் அதை நியாயம் என்று நிரூபித்துவிட்டு மற்றதைப் பேசுங்கள்.

காந்தி: படங்களில் குற்றம்சாட்டப்படுவோரிடம் நியு யோர்க் போலீசார் கூறுவார்கள்,“வாயைத்  திறந்து எதுவும் கூறாதிருக்கும் உரிமை உங்களுக்கு உண்டு”, என்று. அதைப் பின்பற்றி இஸ்ரான் வாயைப் பொத்திக் கொண்டிருப்பது நல்லது. வாயைக் கொடுத்துவிட்டு நாறிப்போக வேண்டாம்.

TAGS: