“மன்னிப்பு தேவையில்லை;ரிம80 மில்லியனைத் திருப்பிக்கொடுங்கள்”

 “பிரதமர் அவர்களே,அம்னோ-பிஎன்னின் தோற்றத்தை உயர்த்திக்காட்ட ரிம80மில்லியனைச் செலவிட்டீர்களா?அது வரிசெலுத்துவோரின் பணம், அதுவும் கொஞ்சநஞ்ச பணமல்ல.”

 

பிபிசி-யைப் பின்பற்றி மன்னிப்பு கேளுங்கள்;நஜிப்பிடம் வலியுறுத்து

பல இனவாதி: பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மன்னிப்பு கேட்டால்  மட்டும் போதாது.அந்த விளம்பர நிகழ்ச்சிகளுக்காக செலவிடப்பட்ட பணத்தை ஈடுசெய்ய வேண்டும்.
 

ஜோ லீ:கதை கட்டுவதில் வல்லவர் நஜிப். உலகின்கண் தம் தோற்றத்தை உயர்த்திக்காட்ட மக்களின் பணத்தை எடுத்து மேலைநாட்டு ஊடக நிறுவனங்களுக்குக் கொடுத்திருக்கிறார்.

மேலைநாட்டு ஊடகக் கில்லாடிகளுக்கு பணத்தை அள்ளிக்கொடுத்தபோது அந்தப் பணத்தால் பல்லாயிரக்கணக்கான மலேசியர்கள் பயன்பெறலாமே என்ற எண்ணம் அவருக்குத் தோன்றவே இல்லையா?

அந்த வகையில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டும் இதேபோல் மோசமானவர்தான். ஒரு புறம் மேலைநாடுகளைக் கண்டித்துக்கொண்டே இன்னொரு புறம், அமெரிக்க அதிபருடன்சேர்ந்து ஐந்து நிமிடம் ஊடகங்களுக்குக் காட்சியளிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்காக யூதர்கள் கும்பல் ஒன்றுக்கு மில்லியன் கணக்கில் அள்ளிக் கொடுத்திருக்கிறார்.

இந்த உண்மைகள் எல்லாம் உத்துசான் மலேசியாவையும் மற்ற அம்னோ ஊடகங்களையும் படிக்கும் வாசகர்களை எட்டுவதில்லை. அதனால்தான் மலாய்க்காரர்களில் பாதிப்பேருக்கு தங்கள் தலைவர்கள் எவ்வளவு மோசமானவர்கள் என்பது தெரிவதில்லை.

நியாயவான்: வரிப்பணம் எப்படியெல்லாம் பயன்படுத்தப்படுகிறது. இங்கு, நஜிப்பின் தோற்றத்தை உயர்த்திக்கொள்ள அது விரயமாக்கப்பட்டுள்ளது.

இப்போது, 1பராமரிப்பு என்ற பெயரில் கட்டாய சுகாதாரப் பராமரிப்புக் காப்புறுதித் திட்டத்துக்கு நம் வருமானத்தில் 10விழுக்காட்டைச் செலுத்த வைத்து  நம் பணத்தை மேலும் சுருட்டிக்கொள்ள ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

பணம் செலுத்தப்பட்ட விளம்பரதாரர் நிகழ்ச்சிகளை ஒளியேற்றியதற்கு பிபிசி மன்னிப்பு கேட்டது

அலிஸ்:பிரதமர் அவர்களே, அம்னோ-பிஎன்னின் தோற்றத்தை உயர்த்திக்காட்ட ரிம80 மில்லியனைச் செலவிட்டீர்களா?அது வரிசெலுத்துவோரின் பணம், அதுவும் கொஞ்சநஞ்ச பணமல்ல. உங்களை விளம்பரப்படுத்திக்கொள்ள இவ்வளவு பணத்தைச் செலவிட வேண்டுமா?

அப்பணத்தை நம் ஏழைமக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த பயன்படுத்திக் கொண்டிருக்கலாம். ஏழை மக்களின் நீண்டகால பசியைப் போக்க அது உதவி இருக்கும்;அவர்களின் மருத்துவ சிகிச்சைகளுக்கு உதவி இருக்கும்.

பெயரிலி_4031: எப்பிசி நிறுவனம் தயாரித்த மலேசியாவின் நடப்புவிவகாரங்களைக் காண்பிக்கும் எட்டு துண்டுப்படங்களை ஒளியேற்றியதை வெளிப்படையாக  ஒப்புக்கொண்டு அத்தவற்றுக்குகாக மன்னிப்புக் கேட்டுக்கொண்ட பிபிசியைப் பாராட்டுகிறேன்.

தவற்றை ஒப்புக்கொள்ளும் ஆண்மைத்தன்மை உங்களிடம் உள்ளது. அதுவே நல்ல பண்புமாகும். பிபிசி நியாயமானது, சுதந்திரமாக செயல்படுவது, துணிச்சலானது.அதற்காகவே அதன்மீது எப்போதும் நம்பிக்கை உண்டு.

விழிப்பானவன்: பிபிசி ஒரு மிகப்பெரிய செய்தி நிறுவனம். அப்படியிருக்க, பொது உறவு மேம்பாட்டு நிறுவனமான எப்பிசி பற்றி அதற்குத் தெரியாதா என்ன?

எப்பிசி ஒன்றும் சமூகத் தொண்டு நிறுவனம் அல்லவே. எங்களை மூன்றாம் உலகத்தின் ஒன்றும்தெரியாத அசடுகள்போல் நினைத்துக்கொண்டுப் பேச வேண்டாம்.

மேலைநாட்டு ஊடகங்களோ, அரசுகளோ, பல்கலைக்கழகங்களோ எல்லாம் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்தாம். எல்லாமே பணத்துக்காக அலைகின்றன. 

நடுவழிசெல்வோன்: எட்டுத் துண்டுப் படங்களுக்கு ரிம80மில்லியன். மலேசியாவில் பணம் கொட்டியா கிடக்கிறது?

எத்தனை மருத்துவமனைகள் மருந்துகள் இல்லாமல், உயிர்-காக்க தேவையான வசதிகள் இன்றி அல்லாடுகின்றன.ஏழைகள் மேலும்மேலும் ஏழையாகிக் கொண்டே போகிறார்கள்.வாழ்க்கைச் செலவோ மேன்மேலும் உயர்ந்துகொண்டே போகிறது.

பிரளயம்: பிபிசி-இன் மன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது.ஆனால், அது போதுமானதல்ல. பாதிப்பு ஏற்பட்டது ஏற்பட்டதுதான். ஒன்று செய்யலாம். முன்பு ஒளியேற்றிய பொய்களுக்குப் பரிகாரமாக சில நிகழ்ச்சிகளை ஒளியேற்றி உண்மை நிலவரத்தைத் தெரிவிக்கலாமே.

TAGS: