ரௌடிக் கும்பலை ஒடுக்கப் போலீசாருக்குத் துணிச்சல் இல்லை

“போலீசாரால் எதுவும் செய்ய முடியாது” என்ற சொற்றொடர் அந்தக் குண்டர்களுக்கு பாதுகாப்புச்சேவை அளித்ததைத் தவிர வேறு எதனையும் போலீசார் எதனையும் செய்ய விரும்பவில்லை என்பதைப் போலத் தொனிக்கிறது.”

“குண்டர்கள்'”தாக்கியதால் இன்னொரு செராமா நிகழ்வு நிறுத்தப்படது

கலா: கிள்ளான் கம்போங் இடாமானில் பிப்ரவரி மாதம் 11ம் தேதி மாலை எம்எஸ்எம் என்னும் Solidariti Mahasiswa Malaysia அமைப்பு பொதுக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஆகவே சட்டத்தின் அடிப்படையில் அது சட்டப்பூர்வமான கூட்டமாகும்.

ரௌடித்தனத்தால் அந்தக் கூட்டம் நடைபெறவில்லை என்றால் அதற்கு போலீஸ் பொறுப்பேற்க வேண்டும். காரணம் அந்த ரௌடிகள் மீது நடவடிக்கை எடுக்காததால் சட்ட அமலாக்க அமைப்பு என்னும் கடமையைச் செய்யப் போலீசார் தவறி விட்டனர்.

என்னுடைய பார்வையில் அந்த விவகாரம் மிக மிகக் கடுமையானது. ஏனெனில் மக்களுக்கு சமமான சட்டப் பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை என நான் கருதுகிறேன். அதிகார வர்க்கத்துக்குக் கடமைப்பட்டுள்ள சில கும்பல்களுக்கு போலீசார் சலுகை அளிப்பதாகத் தோன்றுகிறது.

பெர்ட் தான்: நமது துணை தேசிய போலீஸ் படைத் தலைவர் எங்கே போனார்?  மலேசியர்களாகிய நமது மாணவர்களைப் பாதுகாப்பதற்கு அவர் இங்கு இல்லை. நிச்சயம் மரண தண்டனையை எதிர்நோக்கும் சவூதி அரேபியர் ஒருவரை அவரது நாட்டுக்கு கொண்டு செல்ல அவருக்கு நேரம் இருக்கிறது.

போலீசார் எதற்கு முன்னுரிமை அளிக்கின்றனர் பார்த்தீர்களா? அவர்களுக்கு பணக்கார சவூதி அரசாங்கத்துக்கு “அடி பணிவது”, குண்டர்களிடமிருந்து மலேசியர்களைப் பாதுகாப்பதை விட  முக்கியமானதாகி விட்டது.

என்ன தான் நடக்கிறது? போலீசார் குண்டர்களைப் பார்த்து பயப்படுகின்றனரா? அரசியல் ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்ட அந்த குண்டர்களுக்கு எதிராக போலீசார் உறுதியான நடவடிக்கை எடுக்கா விட்டால் நாட்டில் குழப்பம் ஏற்படத் தொடங்கி விடும்.

வெளிப்படையான அத்தகைய குண்டர்தனத்தைக் கண்டு போலீசார் கண்ணை மூடிக் கொண்டிருக்கக் கூடாது. பிஎன் அரசாங்கம் வீழ்த்தப்படும் போது கடமைகளை மறந்த அந்த மூத்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

எல்லாருக்கும் நியாயம்: அந்தக் குண்டர்களுக்கு வெட்கமே இல்லை. மாணவர் செராமாவுக்கு இடையூறு செய்வதால் மக்கள் தங்கள் முட்டாள்தனத்தை ஒப்புக் கொள்வர் என அவர்கள் எண்ணுகின்றனரா?

செராமா ஏற்பாட்டாளர்கள் அந்தக் கோழைகளைப் படம் பிடித்து இணையத்தில் சேர்த்திருக்க வேண்டும். அப்போது அந்தக் கோழைகள் யார் என்பது எல்லாருக்கும் தெரியும்.

அர்மெகடோன்: அது அம்னோவின் இன்னொரு கிளையின் வேலையாகத்தான் இருக்க வேண்டும். மலாய்க்காரர் அல்லாதாரை பெர்க்காசா காயப்படுத்தும் வேளையில் மலாய் இளைஞர்களை மூன்றாவது அமைப்பு ஒன்று தாக்கி வருகிறது.

அம்னோ தலைவர்கள் தங்களுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லாததைப் போல வழக்கம் போல தங்கள் பணியில் ஈடுபட்டிருப்பர். அவர்கள் உண்மையிலேயே குண்டர்கள் என்றால் போலீஸ் கார்கள் ஏன் தாக்கப்படவில்லை?

நமது பேச்சுச் சுதந்திரமும் ஒன்று கூடும் சுதந்திரமும் பறி போய் விட்டது.

என்ன நடக்கிறது: ஏதோ கோளாறு நடக்கிறது. இன்னொரு “சிறப்புப் படை” முழு விதி விலக்குடன் இயங்குகிறது.

யூங் ஜான் யென்: போலீசாரால் எதுவும் செய்ய முடியாது? கற்களையும் கம்புகளையும் எறிவது ஒருவருக்கு காயத்தையும் ஏற்படுத்தலாம் அல்லது ஒருவரைக் கொல்லவும் முடியும். காலை மணி 4 வரை மிரட்டுவது கிரிமினல் அச்சுறுத்தல் இல்லையா? போலீசாருக்கு துணிச்சல் இருந்தால் போலீசார் நிறையச் செய்திருக்க முடியும்.
 
மலேசியா ஏபியூ: 70 பேரடங்கிய கும்பல் வன்முறையில் இறங்குகிறது. போலீசாரால் எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால் 20,000 பேர் கொண்ட அமைதியான கூட்டத்தை நிறுத்த அவர்கள் எல்லாவற்றையும் செய்வார்கள்.

அமைதியாக இருப்பவர்களுக்கு மீது போலீசார் நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் வன்முறையில் ஈடுபடுகின்றவர்களை அதனால் ஒன்றும் செய்ய முடியாது. அரச மலேசிய போலீஸ் படையின் துணிச்சலுக்கு என் பாராட்டுக்கள்.

லிம் சொங் லியோங்: லிபியா, எகிப்து, சிரியா, மலேசியா ஆகியவற்றை ஒரே வரிசையில் வைக்க முடியும். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நமது பொறுமையை அளவுக்கு அதிகமாக சோதிக்கிறார்.

அடையாளம் இல்லாதவன்_3e21: விரக்தி அடைந்த மனிதர்களே விரக்தியான வேலைகளைச் செய்வார்கள். என்றாலும் ஒளிமயமான இன்னொரு பக்கத்தை நாம் பார்க்க வேண்டும். சர்வாதிகார ஆட்சி அஸ்தமனப் போகிறது  என்பதற்கு அது தெளிவான சான்று என நான் கருதுகிறேன்.

அவர்களைக் கண்டு அஞ்ச வேண்டாம். நமது பிள்ளைகளுடைய நல்வாழ்வுக்காக நாம் ஒன்று கூடி அவர்களை எதிர்க்க வேண்டும்.

வெர்சே: ஆசிரியர் ஐசாக் அசிமோவ் (1920-1992) இவ்வாறு சொல்கிறார்; “திறமையற்றவர்கள் கடைசியாக நாடுவது வன்முறையாகும்.”

TAGS: